அமாவாசை அன்று வாசலில் கோலம் போட கூடாது என்று கூறுவது ஏன்?

​வீட்டு வாசலில் அமாவாசை அன்று கோலம் போட கூடாது என கூறுவதற்கான காரணம் என்ன தெரியுமா?

Last Updated : Dec 11, 2020, 06:23 AM IST
அமாவாசை அன்று வாசலில் கோலம் போட கூடாது என்று கூறுவது ஏன்? title=

​வீட்டு வாசலில் அமாவாசை அன்று கோலம் போட கூடாது என கூறுவதற்கான காரணம் என்ன தெரியுமா?

வீடு என்பது லட்சுமி வசிக்கும் இடம். இதனால் அவளுக்கு கிரகலட்சுமி என்றும் பெயர் உண்டு. வீட்டில், வாஸ்து புருஷனும் (vastu) உறைந்திருக்கிறார். அதன் எட்டு மூலைகளிலும் (திசைகளிலும்) திக் பாலகர்கள் உண்டு. எண்ணற்ற இறையுருவங்களைக் கொண்ட பூஜையறையுடன் திகழும் வீடு, கோயிலுக்குச் சமம்!

கடவுளை வழிபடுவதுடன், அவருடன் சேர்ந்து வாழ்கிறோம். கடவுள் (God) இருப்பிடமான வீட்டை, அனுதினமும் காலையில் சுத்தம் செய்து வாசலில் கோலம் போட வேண்டும். இது வழிபாட்டில் ஒன்று. பசுஞ்சாணியால் சுத்தம் செய்து கோலம் (Rangoli) போட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது தர்மசாஸ்திரம். கோலத்துக்கு ரங்கவல்லீ என்று பெயர்.

ALSO READ | காரில் எலுமிச்சம்பழம், மிளகாய் கட்டுவது எதற்காக தெரியுமா?

வட நாட்டவர் அதை ரங்கோலி என்பர். வீட்டுக்குள் உறைந்திருக்கும் இறை பூஜையின் ஆரம்பமே கோலம்தான்! அடுக்குமாடிக் கட்டடத்தில் குடியிருக்கும் ஆசை வந்த பிறகு, குடியிருக்கும் வீட்டை (ஃபிளாட்), தங்கும் விடுதிகளுக்கு (போர்டிங் அன்டு லாட்ஜிங்) ஒப்பாகவே பார்க்கிறோம். வீட்டில் மிளிரும் தெய்வீகத்தை மறந்து விட்டோம். அமாவாசை- முன்னோர் ஆராதனை நாள். அது தினம் தினம் வராது.

பூஜை என்பது தினம் தினம் உண்டு. இறை ஆராதனையும், முன்னோர் ஆராதனையும் ஒருசேர வந்தால் முன்னோர் ஆராதனைக்கு முதலிடம் அளிக்க வேண்டும் என்று தர்மசாஸ்திரம் சொல்லும். அமாவாசை அன்று முன்னோர் ஆராதனைக்கு முதலிடம் அளிப்பதால் கோலம் போடுவதை தள்ளிப்போட வேண்டும். இது, முன்னோருக்கு நாம் அளிக்கும் பெருமை!

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News