நிறைய 90s கிட்ஸ்களுக்கு இன்னும் திருமணம் ஆகாதது ஏன்? காரணம் இதுதான்!

Why 90s Kids Are Not Married : நம்மில் பலர், 30 வயதிற்கும் மேலான 90ஸ் கிட்ஸாக இருந்தும் திருமணம் ஆகாமல் இருப்பர். அதற்கு என்ன காரணம் என்ன தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Nov 17, 2024, 04:05 PM IST
  • பெரும்பாலான 90ஸ் கிட்ஸ்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை
  • இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன?
  • எந்த மாதிரியான எதிர்பார்ப்புகளை வைத்திருக்கின்றனர்?
நிறைய 90s கிட்ஸ்களுக்கு இன்னும் திருமணம் ஆகாதது ஏன்? காரணம் இதுதான்! title=

Why 90s Kids Are Not Married : இந்தியாவில் இருக்கும் பல 90s கிட்ஸ்களுக்கு இன்னும் திருமணம் ஆகாமல் இருப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இதற்கு கலாச்சாரம், தனிப்பட்ட விருப்பம் என பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அவை குறித்து இங்கு பார்ப்போம். 

அதிக எதிர்பார்ப்புகள்:

எதார்த்தமின்மை: இப்போதைய இந்திய ஆண்கள் பலர், தங்களுக்கு வர வேண்டிய வாழ்க்கை துணை, எப்படி வர வேண்டும் என்பது குறித்து யதார்த்தமற்ற மனநிலையில் இருக்கின்றனர். அழகு, குடும்ப பின்னணி, படிப்பு உள்ளிட்ட பலவற்றில் இந்த எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. 

படிப்பு மற்றும் வருமானம்: ஆண்கள் பெரும்பாலும் படித்த மற்றும் தொழில் சார்ந்த பெண்களைத் தேடுகிறார்கள், ஆனால் எந்த பெண்கள் அதிகம் படித்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றனரோ, திருமணத்திற்கு பிறகு அவர்களே அந்த பெண் குடும்பத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். 

பொருத்தம்: இவர்கள், தங்களுக்கு சரியான பொருத்தமான ஆளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இப்படியே காலத்தை கடத்துகின்றனர். இதனால், அவர்களுக்கு திருமணம் நடப்பது தள்ளிப்போகிறது. 

பெண்களின் எதிர்பார்ப்புகள் மாறுதல்:

பெண்களின் முன்னேறிய மனநிலை: தற்போதைய உலகில் இருக்கும் பெண்களுக்கு முன்னர் இருந்தது போன்ற மனநிலை இல்லை. உணர்ச்சி ரீதியாக முதிர்ச்சி பெற்றவரகள், நிதி ரீதியாக செட்டில் ஆனவர்கள், முற்போக்கு சிந்தனை கொண்ட ஆண்கள் தங்களுக்கு வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். ஆனால், பெண்களின் இந்த எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு எந்த ஆண்களும் இருப்பதில்லை.

பகிரப்பட்ட பொறுப்பு: வீட்டு வேலைகளில் எதுவாக இருந்தாலும் அதை பகிர்ந்து செய்ய வேண்டும் என்று பெண்கள் விரும்புகின்றனர். ஆனால், தன் வீட்டு வேலைகளை அந்த வீட்டின் பெண்கள் மட்டும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஆண்களுக்கு அதிகமாக இருக்கிறது. இதனால், திருமணம் தள்ளிப்போகிறது. 

பொருளாதார சவால்கள்:

நிதி பாதுகாப்பு: நிதி ரீதியாக, நிலைத்தன்மை இல்லாத ஆண்களுக்கு பெண் கிடைப்பது சிரமாமாக இருக்கிறது. பெண் கொடுக்க விரும்புபவர்கள் இதை அதிகமாக பார்ப்பதால், தங்கள் மகளின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு பெண் தராமல் இருக்கின்றனர். 

மணமகன்கள் அதிகம்: நகர்ப்புறங்களில், மணப்பெண்களை தாண்டி, மணமகன்கள் அதிகமாக இருக்கின்றனர். இதனால், பெண் கிடைப்பது கடினமாகி வருகிறது. 

சமூக அழுத்தம்:

குடும்பங்களின் குறுக்கீடு: 90s கிட்ஸ்களுக்கு பெரும்பாலும் காதலிக்க ஆள் அமைவதில்லை. இதனால், கடைசி கட்டமாக இவர்கள் குடும்பத்தினருடன் பெண் பார்க்கும் படலத்தில் இறங்குகின்றனர். இதில், ஜாதி, மதம், இனம், மொழி என பல்வேறு ஃபில்டர்களை தாண்டிதான் பெண்ணே பார்க்கின்றனர். இதில், அவர்களுக்கு ஏற்றார் போல பெண் அமைவது சாத்தியமற்ற ஒன்றாக போய் விடுகிறது. 

மேலும் படிக்க | பிறர் தவறு செய்யும் போது அவர் மனதை புண்படுத்தாமல் நேர்பட பேசுவது எப்படி?

நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள்: இந்தியாவில் arranged marriage அதிகமாக இருக்கிறது. இந்த பழையகால பெண் பார்க்கும் முறை பலருக்கு பிடிக்காததாக இருப்பதால் பெண் கிடைப்பது கஷ்டமாகி விடுகிறது. 

முன்னெடுப்புகளில் தாமதம் காட்டுவது:

தள்ளிப்போடுதல்: ஒரு சில ஆண்கள், தங்களுக்கு ஏற்ற மணமகளை தேட நேரம் கடத்துகின்றனர். அப்படி யாரையேனும் பார்த்தால், தன்னிடம் இருக்கும் விஷயங்களை மாற்றிக்கொள்ள உந்தப்படுவோமோ என்ற பயத்தினால் எந்த முன்னெடுப்புகளையும் எடுக்காமல் இருக்கின்றனர். 

நிராகரிப்பு பயம்: தன்னம்பிக்கை குறைவாக இருக்கும் ஆண்கள், ஒருவர் நம்மை நிராகரித்து விடுவாரோ என்ற பயத்தினாலேயே திருமணம் செய்து கொள்வதற்கான முன்னெடுப்புகளை எடுக்காமல் இருக்கின்றனர். 

மேலும் படிக்க | காதல் உறவை தவிர நீங்கள் கட்டி காக்க வேண்டிய 8 உறவுகள்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News