இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்! சிட்டுக்குருவிகளை காத்திடுவோம்!

உலக சிட்டுக்குருவிகள் தினம் (World House Sparrow Day - WHSD), ஆண்டுதோறும் மார்ச் 20 ம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

Last Updated : Mar 20, 2019, 11:37 AM IST
இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்! சிட்டுக்குருவிகளை காத்திடுவோம்! title=

உலக சிட்டுக்குருவிகள் தினம் (World House Sparrow Day - WHSD), ஆண்டுதோறும் மார்ச் 20 ம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி தன் மூலம் அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் 2010 ம் ஆண்டில் இருந்து உலக சிட்டுக்குருவிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது.

மனிதனின் பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாறுதல்கள், நவீன தகவல் தொழில் நுட்ப புரட்சி, இயற்கைக்கு மாறாக எடுக்கப்படும் சுற்றுச்சூழல் நடவடிக்கை போன்ற காரணங்களால், சிட்டுக்குருவி எனும் சிற்றினம் அழிவுப்பாதைக்கு தள்ளப்பட்டுள்ளது. குருவிகளில் இந்த அழிவை 1990களிலேயே முதன்முதலாக அறிவியலாளர்கள் அவதானித்தார்கள். இவற்றுக்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன.

உலக அளவில் அதிக அளவு பறவை இனங்கள் அழிந்து வரும் நாடுகளில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் பிரேசில் உள்ளது. இந்த நாட்டில் 141 பறவை இனங்கள் வேகமாக அழிந்துவருகின்றன. ஏழாவது இடத்தில் உள்ள இந்தியாவில் 88 பறவை இனங்கள் அழிந்து வருகின்றன.

குருவி இனத்தைப் பார்க்காமலேயே வளர்ந்துவரும் இளம் தலைமுறையினர்கள் குருவிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என இயற்கை செயற்பாட்டாளர்கள் விரும்புகின்றனர். இந்நிலையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று மார்ச் 20ம் தேதி உலக சிட்டுக்குருவி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

Trending News