புதுடெல்லி: 7th Pay Commission latest news: புத்தாண்டின் முதல் மாதத்தில் மத்திய ஊழியர்களுக்கு மீண்டும் நல்ல செய்தி கிடைக்கப் போகிறது. 2022 ஜனவரியில் அகவிலைப்படி மீண்டும் ஒருமுறை அதிகரிக்கப்பட உள்ளது. அதாவது, ஊழியர்களின் சம்பளத்தில் (Central government employee's salary) மீண்டும் பம்பர் உயர்வு இருக்கும். ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக, மத்திய ஊழியர்களின் Fitment factor தொடர்பாக மத்திய அரசு முக்கிய முடிவை எடுக்க உள்ளது.
மீண்டும் ஊழியர்களின் சம்பளம் உயரும்
மத்திய ஊழியர்களின் Fitment factor அதிகரித்தால், அவர்களின் அடிப்படை சம்பளம் பெரிய அளவில் உயரும். இருப்பினும், அகவிலைப்படி (DA Hike) எவ்வளவு உயர்த்தப்படும் என்பது தற்போது வரை முடிவு செய்யப்படவில்லை. நவம்பர் மாதத்திற்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (AICPI) தரவுகள் வெளியாகியுள்ளன. AICPI குறியீட்டின் தரவுகளின்படி, இது 2 முதல் 3% வரை DA அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது மத்திய ஊழியர்களுக்கு (7th Pay Commission) 31 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. ஜனவரியில் டிஏவில் 2% முதல் 3% வரை (Dearness allowance) அதிகரித்தால், ஊழியர்களுக்கு 33 முதல் 34 சதவிகிதம் வரை டிஏ கிடைக்கத் தொடங்கும். அதாவது, மீண்டும் ஒரு முறை ஊழியரின் சம்பளம் அதிகரிக்கும்.
ALSO READ | 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தில் அதிரடி உயர்வு
ஊழியர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்
டிசம்பர் 2021 இறுதிக்குள் மத்திய அரசின் சில துறைகளில் பதவி உயர்வுகள் இருக்கக்கூடும். இது தவிர, Budget 2022க்கு முன் Fitment factor பற்றிய விவாதம் உள்ளது, அதில் ஒரு முடிவு வரலாம். இது நடந்தால், குறைந்தபட்ச அடிப்படை சம்பளமும் உயரும். ஆனால், தற்போது, அகவிலைப்படியைப் பற்றி AICPI குறியீட்டின் தரவு என்ன சொல்கிறது என்பதை காணலாம்.
DA Calculator from July 2021
மாதம் மதிப்பெண்கள் DA சதவீதம்
ஜூலை 2021 353 31.81%
ஆகஸ்ட் 2021 354 32.33%
செப்டம்பர் 2021 355 32.81%
அக்டோபர் 2021 - -
நவம்பர் 2021 - -
டிசம்பர் 2021 - -
DA மதிப்பெண்களின் கணக்கீடு
ஜூலைக்கான கணக்கீடு- 122.8X 2.88 = 353.664
ஆகஸ்டுக்கான மொத்தம்- 123X 2.88 = 354.24
செப்டம்பர் மாதத்திற்கான கணக்கீடு- 123.3X 2.88 = 355.104
DA 3 சதவிகிதம் அதிகரிக்கும்
AICPI குறியீட்டின் நவம்பர் தரவைப் பார்த்தால், குறியீடு 125.7 ஆகும். அதாவது அகவிலைப்படி 33 சதவீதமாக மாறியுள்ளது. இதன்படி அதில் 2 சதவீதம் உயர்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களின் புள்ளிவிவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. இது மேலும் 1 சதவீதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 2021க்குள் CPI (IW) எண்ணிக்கை 125 ஆக இருந்தால், அகவிலைப்படியில் 3 சதவீதம் அதிகரிப்பு உறுதி. அதாவது மொத்த DA 3% முதல் 34% வரை அதிகரிக்கும். இது ஜனவரி 2022 முதல் வழங்கப்படும் மத்திய ஊழியர்களின் சம்பளம் உயரும்.
34% DA இல் கணக்கீடு
அகவிலைப்படியை 3% அதிகரித்த பிறகு, மொத்த DA 34% ஆக இருக்கும். தற்போது ரூ.18,000 அடிப்படை சம்பளத்தில், மொத்த ஆண்டு அகவிலைப்படி ரூ.73,440 ஆக இருக்கும். ஆனால் வித்தியாசத்தைப் பற்றி பேசினால், சம்பளத்தில் ஆண்டு அதிகரிப்பு ரூ.6,480 ஆக இருக்கும்.
குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு
1. பணியாளரின் அடிப்படை சம்பளம் ரூ 18,000
2. புதிய அகவிலைப்படி (34%) ரூ.6120/மாதம்
3. அகவிலைப்படி இதுவரை (31%) ரூ.5580/மாதம்
4. எவ்வளவு அகவிலைப்படி அதிகரித்தது 6120- 5580 = ரூ 540/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு 540X12 = ரூ.6,480
அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு
1. பணியாளரின் அடிப்படை சம்பளம் ரூ 56900
2. புதிய அகவிலைப்படி (34%) ரூ 19346/மாதம்
3. அகவிலைப்படி இதுவரை (31%) ரூ 17639/மாதம்
4. 19346-17639 = ரூ. 1,707/மாதம் எவ்வளவு அகவிலைப்படி அதிகரித்தது
5. ஆண்டு ஊதிய உயர்வு 1,707 X12 = ரூ 20,484
ALSO READ | 7th Pay Commission முக்கிய அப்டேட்: ரூ. 1,44,200 வரை அரியர் தொகை கிடைக்கும், விவரம் இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR