IRCTC Air Ticket Booking: இந்த பண்டிகை காலத்தில் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? ஐஆர்சிடிசி ஏர் சில சிறப்பு அம்சங்களை உங்களுக்கு வழங்க உள்ளது.
ஐஆர்சிடிசி (IRCTC) ஏர் மூலம் குறைந்த வசதிக் கட்டணமான (convenience fee ) ரூ.50-ல் ஒருவர் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். மேலும் விவரங்களை, air.irctc.co.in என்ற IRCTC ஏரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் லாக் இன் செய்து தெரிந்துகொள்ளலாம்.
IRCTC அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், தனது சமீபத்திய ட்வீட் ஒன்றில், IRCTC ஏர் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான வசதிகள் பற்றி தெரிவித்துள்ளது. அந்த ட்வீட்டில், "இந்த #Diwali-யில், உங்கள் குடும்பத்திற்கு ஒரு சிறந்த பரிசை வழங்குங்கள். அது நீங்கள் அவர்களுடன் இருப்பதுதான்!! வீட்டிற்கு, உங்கள் குடும்பத்திடம் செல்ல, #IRCTCAir இல் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, ஒவ்வொரு புக்கிங்கிலும் அற்புதமான பயன்களைப் பெறுங்கள். குறைந்த வசதிக் கட்டணமாக ரூ. 50, #LTC கிளெயிம்கள் மற்றும் இன்னும் பல சலுகைகள் கிடைக்கும். பிற விவரங்களுக்கு http://air.irctc.co.in /download app #DiwaliDhamaka #FlyAt50 ஐப் பார்வையிடவும்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
This #Diwali, give your #family the best gift ever- your presence. To fly home, #book #flight #tickets on #IRCTCAir & #avail amazing #benefits on every #booking. Lowest convenience fee of 50, #LTC claims & more. Visit https://t.co/fLKvfBulvZ /download app #DiwaliDhamaka #FlyAt50
— IRCTC (@IRCTCofficial) October 26, 2021
அடுத்த ட்வீட்டில், ஐஆர்சிடிசி, "பண்டிகைக் காலங்கள் சிறப்புக்குரியவை! #IRCTCAir இல் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுங்கள். எளிதாக முன்பதிவு செய்தல், 50 ரூபாய் என்ற குறைந்த வசதிக் கட்டணம், 50 லட்சம் மதிப்பிலான இலவச காப்பீடு போன்ற பல வசதிகளைப் பெற http://air.irctc.co.in /download app-ஐப் பார்வையிடவும்." என்று எழுதியுள்ளது.
#Festive season calls for something special! #Book #flight tickets on #IRCTCAir, For booking benefits like easy booking, #lowest convenience fee of 50 , #Free insurance worth 50 Lac #LTC fare, special #defence fares & more https://t.co/fLKvfBLWUz /download app #DiwaliDhamaka
— IRCTC (@IRCTCofficial) October 27, 2021
IRCTC ஏர் வழங்கும் பல்வேறு நன்மைகளை ஒருவர் கவனத்தில் கொள்ள வேண்டும். அவை பின்வருமாறு:
1) ஒரு வாடிக்கையாளர் குறைந்தபட்ச வசதிக் கட்டணமான 50 ரூபாய்க்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்
2) ரூ.50 லட்சம் பயணக் காப்பீடு (Insurance) இலவசம்
3) LTC டிக்கெட் முன்பதிவு செய்ய அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் உள்ளது
4) ஐஆர்சிடிசி எஸ்பிஐ (SBI) கார்டு பிரீமியர் மூலம் முன்பதிவு செய்தால் 5 சதவீத வேல்யூ பேக்.
ALSO READ: IRCTC E-Catering: தரமான உணவு பெற அங்கீரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் பட்டியல் இதோ..!!!
IRCTC வழியாக விமான டிக்கெட்டுகளை (Flight Ticket) முன்பதிவு செய்யும் முறை மிகவும் எளிமையானது என்பது குறிப்பிடத்தக்கது. கிடைக்கக்கூடிய அனைத்து விமானங்களின் பட்டியலைப் பெற, ஒருவர் வருகை மற்றும் புறப்படும் இடம், பயணிகளின் எண்ணிக்கை, பயண வகுப்பு மற்றும் புறப்படும் தேதி ஆகியவற்றை உள்ளிட வேண்டும். அதன் பிறகு, விருப்பமான விமானத்தை முன்பதிவு செய்ய ’புக் நவ்’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
IRCTC Air என்பது IATA சான்றளிக்கப்பட்ட இணையதளமாகும். இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்கு மலிவு விலையில் விமான டிக்கெட்டுகளை புக் செய்யும் வசதியைக் கொண்டுள்ள வலைத்தளமாகும். இந்த இணையதளமானது, பயணிகள் எளிதாகத் தேர்வுசெய்யக்கூடிய பல்வேறு விமான நிறுவனங்களின் விமான விலைகளைத் தொகுக்கும் வழிமுறையைப் பயன்படுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு, air.irctc.co.in என்ற IRCTC ஏரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடலாம்.
ALSO READ:IRCTC iPay : தற்போது ரயில் டிக்கெட்டை நொடியில் புக் செய்யலாம்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR