Xiaomi Redmi Note 5 Pro: அதிரடியாக விலையை குறைப்பு; தற்போது ரூ 12,999 முதல்....

பிரபலமான சியோமி நிறுவனம் இந்தியாவில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலையை அதிக அளவில் குறைத்துள்ளது.

Written by - ZEE Bureau | Last Updated : Jan 8, 2019, 04:48 PM IST
Xiaomi Redmi Note 5 Pro: அதிரடியாக விலையை குறைப்பு; தற்போது ரூ 12,999 முதல்....

இந்தியாவில் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையாகி உள்ளது என சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனை கொண்டாடும் வகையில், ரெட்மி நோட் 5 ப்ரோ போனில் வாங்க அதிகபட்சமாக ரூ.4000 வரை சலுகையை அறிவித்துள்ளது.

4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி கொண்ட (ரோம்) ஸ்மார்ட்போன்கள் ரூ.12,999 விலையிலும், 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட (ரோம்) ஸ்மார்ட்போன்கள் ரூ. 13,999 விலையிலும் கிடைக்கும் என அறிவித்துள்ளது. இந்த இரு ஸ்மார்ட்போன்களின் விலையில் ரூ. 1000 மற்றும் ரூ. 2000 குறைக்கப்பட்டுள்ளது.

இந்த ரெட்மி ஸ்மார்ட்போன்களில் இதில் தான் முதல்முறையாக ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச் ஃபுல் ஹெச்.டி. (18:9) கொண்டது. பின்புறத்தில் இரண்டு கேமரா (12MP + 5MP) பொருத்தப்பட்டு உள்ளது. செல்பி எடுக்க 20MP கேமரா உள்ளது. மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி உள்ளது. ஆண்ட்ராய்டு 7.1.2 ஆகும்.

 

 

More Stories

Trending News