வெளியானது ஷாருக் - சல்மான் கூட்டணியின் `ஜீரோ' டீசர்!

இந்தி திரையுலகின் மிக மிக முக்கிய முன்னணி ஹீரோக்களில் ஒருவர் ஷாருக் கான். இவர், தற்போது 'ஜீரோ' என்ற படத்தில் நடித்துவருகிறார். 'தனு வெட்ஸ் மனு', 'அம்பிகாபதி' படங்களை இயக்கிய ஆனந்த்.எல்.ராய் இப்படத்தை இயக்குகிறார்.

Updated: Jun 14, 2018, 12:51 PM IST
வெளியானது ஷாருக் - சல்மான் கூட்டணியின் `ஜீரோ' டீசர்!
Pic Courtesy: Movie Still

இந்தி திரையுலகின் மிக மிக முக்கிய முன்னணி ஹீரோக்களில் ஒருவர் ஷாருக் கான். இவர், தற்போது 'ஜீரோ' என்ற படத்தில் நடித்துவருகிறார். 'தனு வெட்ஸ் மனு', 'அம்பிகாபதி' படங்களை இயக்கிய ஆனந்த்.எல்.ராய் இப்படத்தை இயக்குகிறார்.

சமீபத்தில், தன் சமூக வலைதளப் பக்கங்களில் ஷாருக் கான் வெளியிட்ட 'ஜீரோ' படத்தின் டீசர் வீடியோ, வைரலாகப் பரவியது. இப்படத்தில் நடிகர் ஷாருக் கான் 'வெர்டிக்கலி சேலஞ்சுடு' (vertically challenged) எனக் கூறப்படும் குள்ள மனிதன் தோற்றத்தில் நடித்துவருகிறார். 

இப்படத்தில் ஷாருக் கானுடன் அனுஷ்கா ஷர்மா, கத்ரினா நடித்து வருகிறார். மேலும் 'ஜீரோ' படம் முழுக்கமுழுக்க ஒரு ரொமான்டிக் ஸ்டோரியாக உருவாகும் எனப் படத்தின் இயக்குநர் ஆனந்த்.எல்.ராய் தெரிவித்துள்ளார்.

படத்தின் முக்கியமான கேமியோ ரோலில் சல்மான் கான் நடிக்கவிருக்கிறார். சல்மான் மட்டுமல்லாமல், படத்தில் மற்றொரு கேமியோ ரோலில் நடிக்கும் கஜோலின் பகுதிகளும் படமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீபிகா படுகோன், ஆலியா பட், ஶ்ரீதேவி, கரீஷ்மா கபூர், ராணி முக்கர்ஜி ஆகியோர் நடிக்க உள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

'ஜீரோ' படத்தில் ஷாருக்கை மூன்றடி குள்ள மனிதனாக மாற்ற அதிநவீன தொழில்நுட்பத்தை படக்குழு பயன்படுத்திவருகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. அதில் நடிகர் ஷாருக் கானுடன் நடிகர் சல்மான் கான் திகழ்ந்துள்ளார்.

'ஜீரோ' படம் 2018 டிசம்பர் மாதம் 21-ம் தேதி கிறிஸ்மஸ் விடுமுறை வெளியீடாக வர உள்ளது. முன்னதாக, இப்படத்துக்கு 'கத்ரீனா மேரீ ஜான்' எனப் பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.