10ம் வகுப்பு தேர்ச்சி: சிவகங்கை - 98.5%; ஈரோடு - 98.38%; விருதுநகர் - 98.29%

10ம் வகுப்பு பொதுத்தேர்வி 94.5% தேர்ச்சி பெற்றது; சிவகங்கை, ஈரோடு, விருதுநகர் மாவட்டங்கள் என முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : May 23, 2018, 10:51 AM IST
10ம் வகுப்பு தேர்ச்சி: சிவகங்கை - 98.5%; ஈரோடு - 98.38%; விருதுநகர் - 98.29% title=

மதிப்பெண் அடிப்படை விவரங்கள்:

மதிப்பெண் தேர்ச்சி பெற்றவர்கள்
481 மேல் 9402
451 - 480 56,837
426 - 450  64,144
401 - 425 76,413
301 - 400  3,66,084
201 - 300 3,12,587
176 - 200  26,248
175 கீழ் 38,682

மொத்தம் - 950397


தேர்வு மதிப்பெண்கள் எதில் தெரிந்துக்கொள்வது!!

10th ரிசல்ட்! தேர்வு முடிவுகளை எவ்வாறு பார்ப்பது?


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 91.36 ஆகும்.


அறிவியல் பாடத்தில் அதிகபட்சமாக 98.47 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதற்க்கு அடுத்ததாக கணித பாடத்தில் 96.18 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 


9402 மாணவர்கள் என 0.99 சதவிகிதம் பேர் 481 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 


சென்னை பொருத்த வரை கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு தேர்ச்சி அதிகரித்துள்ளது

கடந்த ஆண்டு 93.8 சதவிகிதம் 
இந்த ஆண்டு 94.2 சதவிகிதம் 


மாணவர்கள் மதிப்பெண்களை விளம்பரம் செய்யும் கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை


கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 0.1 சதவீதம் அதிகம் ஆகும். 

கடந்த ஆண்டு 94.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
இந்த ஆண்டு 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


இந்த ஆண்டு 5456 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.


தேர்ச்சி சதவீதம் விவரம்:
மொழி படம் - 96.42
ஆங்கிலம் - 96.50
கணிதம் - 96.18
அறிவியல் - 98.47
சமூக அறிவியல் - 96.47


96.4 சதவீதம் பெண்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்
92.5 சதவீத மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


முதல் மூன்று இடங்களை பிடித்த மாவட்டங்கள் விவரம்:-

சிவகங்கை - 98.5%
ஈரோடு - 98.38%
விருதுநகர் - 98.29%


10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.5% தேர்ச்சி; சிவகங்கை மாவட்டம் முதலிடம்


இன்று தமிழகத்தில் SSLC (எஸ்.எஸ்.எல்.சி.,) தேர்வு முடிவுகள் வெளியாகிறது. இந்த தேர்வு முடிவுகளை இன்று காலை 9.30 மணி முதல் இணையதளத்தில் பார்க்கலாம் என அரசு அறிவித்து உள்ளது.

கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரை 10-ம் வகுப்பு எனப்படும் SSLC பொதுத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 12 ஆயிரத்து 337 பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 64 ஆயிரத்து 491 மாணவர்களும், 36 ஆயிரத்து 649 தனி தேர்வர்களும் என மொத்தம் 10 லட்சத்து 1,140 பேர் எழுதினர். மேலும் தனித்தேர்வர்களில் 5 திருநங்கைகளும், 186 சிறை கைதிகளும் தேர்வு எழுதினார்கள்.

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஏற்கனவே SSLC தேர்வு முடிவுகள் மே 23 வெளியிடப்படும் என்று அறிவித்து இருந்தார். 
இதையடுத்து SSLC தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.

தேர்வு மதிப்பெண்கள் எதில் தெரிந்துக்கொள்வது!!

இந்த தேர்வு முடிவுகள் www.tnresults.nic.in, www.dge.tn.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் பார்க்கலாம். இந்த இணையதளத்தில் தேர்வு எழுதியோர், தங்களின் பதிவு எண், பிறந்த தேதி, மாதம், ஆண்டு பதிவு செய்து மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்.

மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள அலைபேசி எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., ஆக தேர்வு முடிவு வெளியாகும்.

தனித்தேர்வர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தில் வழங்கிய மொபைல் போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., ஆக தேர்வு முடிவு வரும்.

தேர்வு முடிவுகளை எவ்வாறு பார்ப்பது?

> www.tnresults.nic.in, www.dge.tn.nic.in மற்றும் www.dge.tn.gov.in எனும் வலைதளத்திற்கு செல்லவும்.
> இப்பக்கத்தில் மேற்பகுதியில் இருக்கும் SSLC Class 10 Result 2018 கிளிக் செய்யவும்.
> கோரப்படும் தகவல்களை உள்ளிடவும்.
> பின்னர் Submit பொத்தானை கிளிக் செய்யவும்.
> பின்னர் தேர்வு முடிவுகள் திரையில் காண்பிக்கப்படும். பிற்கால தேவைக்கு அதனை பிரதி எடுத்துக்கொள்ளவும்.

தற்காலிக சான்றிதழ்:

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் http://www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் வரும் 28 ஆம் தேதி தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தங்கள் பள்ளிகளில் பெறலாம். அதேபோல தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

மறுகூட்டல் விண்ணப்பம்:

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க நினைத்தால், நாளை(மே 24) முதல் 26 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வர்கள், தங்கள் தேர்வு மையங்கள் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். 

மறுகூட்டல் கட்டணம்:-

கட்டணம்: பகுதி 1 மொழிப்பாடம் ரூ.305, பகுதி 2 ஆங்கிலம் ரூ.305, கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு ரூ.205, விருப்ப மொழிப்பாடம் ரூ.205 என கட்டணத்தை பணமாக செலுத்த வேண்டும். 

துணைத் தேர்வு:-

பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக வரும் ஜூலை 28 ஆம் தேதி சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படும். இதற்க்கான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

Trending News