உடம்பு தான் ஒரே ஆயுதம்!! காலா மேக்கிங் வீடியோ!!

காலா படம் எப்படி உருவானது. படக்குழு வெளியிட்ட படத்தின் மேக்கிங் வீடியோ. 

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 1, 2018, 03:22 PM IST
உடம்பு தான் ஒரே ஆயுதம்!! காலா மேக்கிங் வீடியோ!! title=

தனுஷ் தயாரிப்பில், இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வெளிவர காத்திருக்கும் படம் ‘காலா’. இந்த படம் வரும் 7 ஆம் தேதி உலக முழுவதும் திரைக்கு வருகிறது.

மும்பையின் தாரவி பகுதியில் இருக்கும் தமிழ் மக்களின் உரிமைக்காக போராடும் தாதாவாக ரஜினி நடித்து உள்ளார். இந்த படத்தில் ஈஸ்வரி ராவ், ஹுமா குரேசி, சமுத்திரகனி, நானே பட்டேகர், ஹியூமா குரேஷி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன் அமைத்துள்ளார். 

படத்தின் ஃப்ஸ்ட் லுக், முதல் பார்வை டிரெய்லர், பாடல்கள் மற்றும் டிரெய்லர் என ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இதனால் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை படம் ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த வாரம் படம் திரைக்கு வர உள்ள நிலையில், இன்று சமூக வலைதளத்தில் "காலா" படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 

"காலா" படத்தின் "மேக்கிங்" வீடியோ:-

Trending News