ஆச்சரியமூட்டும் 2.0 படத்தின் வில்லன் அவதாரத்தின் மேக்கிங் வீடியோ

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.0 படத்தில் வில்லனாக நடித்துள்ள பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரின் மேக்கிங் வீடியோ ரிலீசாகியுள்ளது.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Nov 17, 2018, 01:16 PM IST
ஆச்சரியமூட்டும் 2.0 படத்தின் வில்லன் அவதாரத்தின் மேக்கிங் வீடியோ

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.0 படத்தில் வில்லனாக நடித்துள்ள பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரின் மேக்கிங் வீடியோ ரிலீசாகியுள்ளது.

இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் ரஜினி, எமி ஜாக்சன் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் 2.0 திரைப்படம் வரும் நவம்பவர் 29-ம் நாள் வெளியாகிறது. இந்தியாவில் அதிக பொருட்செலவில் உருவான பிரமாண்டமாக திரைப்படமாக 2.0 உருவாகி உள்ளது. இதற்காக கடந்த நான்கு வருடங்களாக படக்குழு உழைத்துள்ளது. இப்படம் வரும் நவம்பர் 29 ஆம் தேதி உலக முழுவதும் திரைக்கு வர உள்ளது.

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் எளிமையான, சமூக கருத்துக்களை கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருபவர். இவர் ஒரு வருடத்திற்கு மூன்று நான்கு படங்களில் நடிப்பவர். ஆனால் 2.0 திரைப்படத்திற்காக அதிக நாட்கள் ஒதுக்கி நடித்துள்ளார். இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள அக்ஷய் குமார் மிகவும் கஷ்டப்பட்டு நடித்துள்ளார். இந்த படத்திற்காக அக்‌ஷய் குமாரின் எவ்வளவு உழைத்தார் என்பது இந்த வீடியோ மூலம் தெளிவாக தெரிகிறது. 

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதை தந்து ட்விட்டர் பக்கத்தில் அக்‌ஷய் குமார் ஷேர் செய்துள்ளார்.