வருகிற 13-ம் தேதி பிரம்மாண்டமாக 3டி வடிவில் வெளியாகும் ‘2.0’ டீஸர்

எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள 2.0 படத்தின் டீசர் பற்றிய தகவல் வெளியிட்டது படக்குழு.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Sep 7, 2018, 06:36 PM IST
வருகிற 13-ம் தேதி பிரம்மாண்டமாக 3டி வடிவில் வெளியாகும் ‘2.0’ டீஸர்
Zee Media

லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹமான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டகளின் பிரம்மாண்டமாகக் கருதப்படும் 2.0 படத்தின் டீசர் வரும் செப்டம்பர் 13 நாள் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

மிகவும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தி உள்ள 2.0 படம், இந்த வருடம் நவம்பர் 29 ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது என ஏற்கனவே அறிவிக்கபட்டு உள்ளது.