Aaytha Ezhuthu: 23 ஆண்டுகளை கடந்த ஆயுத எழுத்து படம்! படத்தில் பேசப்பட்ட அரசியல்!

Aaytha Ezhuthu: மணிரத்னம் இயக்கத்தில் சூர்யா, மாதவன், சித்தார்த் நடித்த ஆயுத எழுத்து படம் வெளியாகி 23 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.    

Written by - RK Spark | Last Updated : May 21, 2023, 11:14 AM IST
  • ஆயுத எழுத்து படம் வெளியாகி 23 ஆண்டுகள் நிறைவு.
  • மணிரத்னம் இந்த படத்தை இயக்கி உள்ளார்.
  • கடந்த 2004 ஆம் ஆண்டு படம் வெளியானது.
Aaytha Ezhuthu: 23 ஆண்டுகளை கடந்த ஆயுத எழுத்து படம்! படத்தில் பேசப்பட்ட அரசியல்! title=

ஆயுத எழுத்து திரைப்படத்தை நாம் எத்தனை முறை பார்த்தாலும் புதிதாக பார்ப்பது போல் தோன்றும்.  தமிழ் சினிமாவின் முக்கியமான மைல்கல் ஆயுத எழுத்து படம் என்று கூறலாம் இந்தியாவில் விரல் விட்டு என்ன கூடிய முக்கிய இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம், அவர் இயக்கத்தில் கடந்த 2004 ஆம் வெளிவந்த ஆயுத எழுத்து திரைப்படம் இன்றுடன் 23 ஆண்டுகளைக் கடந்து விட்டது.  இதில் சூர்யா, மாதவன், சித்தார்த் இயக்குநர் பாரதிராஜா, மீரா ஜாஸ்மின் திரிஷா, ஈஷா டூயல் ஆகியோர் நடித்து பெரும் வெற்றி அடைந்த படம்.  அப்போது வலுவான அரசியல் விஷயத்தை கொண்ட ஒரே தமிழ் படம் முதல்வன் தான். ஆனால் இந்திய அரசியலில் ஒரு புதிய அலையை சித்தரித்த ஆய்த எழுத்துக்கு முன் இது ஒரு முக்கிய படம். 

மேலும் படிக்க | தமிழ் சினிமாவின் 'நீங்காத பிறை' - பாலு மகேந்திராவின் பிறந்தநாள் இன்று

மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து தமிழ் படத்தின் சிறப்பு!

கதைக்களம்:

அரசியல் நாடகத்தை அடிப்படையாகக் கொண்ட படம் இது. இந்திய அரசியலில் ஒரு புதிய கருத்தை கையாள்கிறது. சமூகத்தின் வெவ்வேறு அடுக்குகளில் இருந்து வரும் மூன்று மனிதர்களை இணைக்கும் கதை. இந்தியச் சமூகம்/தமிழ் சமூகம் பற்றிய மூன்று வெவ்வேறு கண்ணோட்டங்கள் படத்தில் வரும் ஒவ்வொரு முன்னணி கதாபாத்திரங்களுக்கும் அழகான காட்சிகள் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன.

ayutha

திரைக்கதை:

இந்த திரைப்படம் மெக்சிகன் 'அமோரெஸ் பெரோஸ்'  உள்ள திரைக்கதை தழுவி, ஆயுத எழுத்து படத்திற்கும் ஹைப்பர்லிங்க் திரைக்கதை முறை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் ஹைப்பர்லிங்க் சினிமாக்கள் அதிகம் இல்லை. அப்படிப்பட்ட ஒரு திரைப்படத்தை உருவாக்க இடம் கொடுத்த திரைக்கதை ஒன்று ஆய்த எழுத்து. அடிப்படையில், 'ஆயுத எழுத்து', அதன் மூன்று முக்கிய கதாபாத்திரங்களை சுற்றி வருகிறது. மைக்கேல், இன்பா மற்றும் அர்ஜுன், அவர்களின் வாழ்க்கை ஒரு கட்டத்தில் பின்னிப் பிணைந்துள்ளது. 'ஆயுத எழுத்து' ஒரு கதையை மூன்று வெவ்வேறு கோணங்களில் சொல்கிறது.  எழுத்தாளர் சுஜாதாவின் அபாரமான வசனங்களைக் கொண்ட படம். சிவிக் சென்ஸ் முதல் காதல் & செக்ஸ் வரை ஒரு கதாபாத்திரத்திற்கு அவரது வார்த்தைகளின் சக்தி வாய்ந்தது.  ஆயுத எழுத்து படம் இந்தியில் 'யுவா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

படத்தில் உற்று நோக்க வேண்டியவை:  

ஒவ்வொரு கதாபாத்திரத்தின் உலகமும் ஒரு வண்ணத்துடன் சித்தரிக்கப்படுகிறது. இன்பாவின் பெரும்பாலான காட்சிகளில் சிவப்பு நிறமும், மைக்கில் பச்சை நிறமும், அர்ஜுன் நீல நிறமும் கொண்டது.  இவை மூன்றும் சதாரனமாக வைத்தது இல்லை, மறைமுகமாக மூன்று வெவ்வேறு நிலப்பரப்பில் வசிக்கும் நபர்களின் பொருளாதார ரீதியான மாற்றங்களால் அவர்களின் அரசியல் நிலைப்பாட்டை கூறுகிறது.  இது மட்டுமின்றி மாணவர்கள் அரசியலுக்கு வந்தால் நாட்டில் என்ன என்ன மாற்றங்கள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தியுள்ளது.    

ஏ.ஆர்.ரஹ்மான் இசை: 

ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை மணி சாரின் படத்தில் அத்தனை காட்சிகளுக்கு பக்க பலமாக உள்ளது. நெஞ்சமெல்லாம் காதல் பாடலுக்கு நகர வாகனங்களின் ஒலியை ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பைக் ஓட்டும் உணர்வைப் பெறச் செய்தார். முக்கியமாக “யாக்கை திரி” பாடலுக்கு இன்று பலபேர் வைப் செய்துகொண்டிருக்கின்றனர்.  இன்று வரை இளைஞர்கள் அரசியலுக்கு வருவது கனவாக மட்டுமே இருந்தது வருகிறது. இருப்பினும் இது குறித்துப் பல வாதங்களை 20 வருடங்கள் முன்பாகவே சிந்தித்துள்ளார் இயக்குநர் மணிரத்னம். இந்த போன்ற சிந்தனைகளைக் கருத்தில் கொண்டுதான் அவரை நாம், இந்தியாவின் முக்கிய  இயக்குநர் என குறிக்கிறோம்.

மேலும் படிக்க | பிச்சைக்காரன் 3 வந்தால் என்னவாகும்? கலக்கத்தில் மக்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News