கார்த்தி நடிப்பில் ‘கைதி’; First Look போஸ்டர் வெளியானது!

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘கைதி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரினை படக்குழுவினர் வெளயிட்டுள்ளனர்!

Updated: Mar 8, 2019, 08:34 PM IST
கார்த்தி நடிப்பில் ‘கைதி’; First Look போஸ்டர் வெளியானது!

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘கைதி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரினை படக்குழுவினர் வெளயிட்டுள்ளனர்!

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான ‘தேவ்’ திரைப்படம் தமிழ் திரைப்பட ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இத்திரைப்படத்தினை தொடர்ந்து மாநகரம் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கைதி’ திரைப்படத்தில் தற்போது பிஸியாகியுள்ளார்.

இத்திரைப்படத்தை சத்யன் சூர்யன் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. மேலும்  ட்ரீம் வாரியர்ஸ்  அசோசியேட் செய்கின்றனர். ஏற்கனவே கார்த்திக் நடிப்பில் வெளியான சகுனி, காஷ்மோரா,  தீரன் அதிகாரன் ஒன்று  ஆகிய படங்களுக்கு இந்நிறுவனம் அசோசியேட் செய்துள்ளனர். 
இப்படத்தின் படபிடிப்பு வேலைகள் தற்போது நடைப்பெற்று வருகிறது, இந்நிலையில் கைதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இரத்த கரை படிந்த இந்த போஸ்டரே இத்திரைப்படம் ஆக்ஷன் திரைப்படமாக அமையலாம் என காட்டுகிறது.