'பேச்சிலர்' பட இயக்குனருடன் கூட்டணி சேரும் நடிகர் கார்த்தி?

'பேச்சிலர்' பட இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கும் புதிய படத்தில் கார்த்தி நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 31, 2022, 02:46 PM IST
  • தமிழ் திரையுலகில் திறமையான நடிகர்களுள் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் கார்த்தி.
  • நடிகர் கார்த்தி முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள 'விருமன்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
'பேச்சிலர்' பட இயக்குனருடன் கூட்டணி சேரும் நடிகர் கார்த்தி? title=

கடந்த ஆண்டு ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தமிழில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற படம் 'பேச்சிலர்' (Bachelor).  சதிஷ் செல்வகுமார் இயக்கிய இந்த திரைப்படத்தில் திவ்ய பாரதி, முனீஷ்காந்த், பகவதி பெருமாள் ஆகியோர் நடித்திருந்தனர்.  இந்த அடல்ட் சப்ஜெக்ட் படமானது கலவையான விமர்சனங்களை பெற்றதுடன், இப்படத்தின் இயக்குனர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.  இவர் தற்போது நடிகர் கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

bachelor

ALSO READ | ஹாரிஸ் இசையில் முதன்முறையாக சிவகார்த்திகேயன்?

தமிழ் திரையுலகில் திறமையான நடிகர்களுள் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் கார்த்தி.  இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.   தற்போது இவர் பலராலும் அதிகம் விரும்பப்படும் கதாநாயகனாக மாறிவிட்டார்.  இந்நிலையில் தனது முதல் படத்தின் மூலமே இளைஞர்களிடம் வரவேற்பை பெற்ற சதிஷ் செல்வகுமாரின் படத்தில் நடிக்கப்போவதாக வெளிவந்துள்ள செய்தி ரசிகர்களிடம் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இயக்குனர் சதிஷ் செல்வகுமாரின் கதையை கேட்ட நடிகர் கார்த்திக்கு கதை பிடித்துவிட்டதால் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.   மேலும் இதில் கார்த்திக்கு ஜோடியாக முன்னணி நடிகையாக கலக்கிவரும் சமந்தாவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது.  இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தற்போது நடிகர் கார்த்தி, முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள 'விருமன்' படத்தில் நடித்து முடித்துள்ளார், அடுத்ததாக P.S.மித்ரன் இயக்கத்தில் 'சர்தார்' படத்தில் நடிக்கவுள்ளார்.

viruman

ALSO READ | மார்ச்சிற்கு தள்ளிபோகிறதா 'எதற்கும் துணிந்தவன்'?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News