தளபதி 68 படத்தில் இணைந்த பிரபல நடிகர்..! ரசிகர்கள் உற்சாகம்..!

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 68 படத்தில் புதிதாக ஒரு நடிகர் இணைந்துள்ளார். அவர் யார் தெரியுமா..?   

Written by - Yuvashree | Last Updated : Sep 6, 2023, 05:25 PM IST
  • தளபதி 68 படத்தின் பணிகள் நடைப்பெற்று வருகின்றன.
  • இதற்கான நடிகர்கள் தேர்வு நடைப்பெற்று வருகிறது.
  • இதில் ஒரு பிரபல நடிகர் நடிக்க உள்ளாராம்.
தளபதி 68 படத்தில் இணைந்த பிரபல நடிகர்..! ரசிகர்கள் உற்சாகம்..!  title=

தமிழ் சினிமாவின் திறமைமிகு இயக்குநர்களின் பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்துள்ளவர், வெங்கட் பிரபு. இவருடன் நடிகர் விஜய் முதன் முறையாக தளபதி 68 படம் மூலம் கூட்டணி சேர்ந்துள்ளார். இந்த படத்தில் நடிக்கவுள்ள நடிகர் நடிகைகள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன. 

புதிதாக இணைந்த நடிகர்..! 

90ஸ்களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர், பிரசாந்த். முன்னணி நடிகராக இருந்த இவர், தற்போது பெரிதாக படங்களில் நடிக்காமல் இருக்கிறார். இந்த நிலையில்தான் இவர் தற்போது தளபதி 68 படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

பிரசாந்த்:

தமிழ் சினிமாவின் இயக்குநரும் நடிகருமான தியாகராஜனின் மகன் பிரசாந்த். இவர், வைகாசி பொறந்தாச்சு படம் மூலம் அறிமுகமானார். இயக்குநர் ஷங்கருக்கு ப்ளாக் பஸ்டர் படமாக அமைந்தது, ஜீன்ஸ். இந்த படத்தில் இரு வேடங்களில் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடித்தார் பிரசாந்த். ஜோடி, சாக்லேட், ஷாக் உள்ளிட்ட பல ஹிட் படங்களில்  நடித்துள்ளார். 

தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்சனைகளினால் இவரால் சரியாக படங்களில் நடிக்க முடியாமல் போனது. இருப்பினும் அவ்வப்போது ரசிகர்களிடையே தன் முகத்தினை ஏதாவது ஒரு படம் மூலம் காண்பித்து வந்தார். அவர் கடைசியாக நடித்த ‘அந்தாகன்’ திரைப்படம் இன்றளவும் வெளிவராமல் இருக்கிறது. இந்த நிலையில் அவர் தளபதி 68 படத்தில் இணைந்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக சில ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க | ஜவான் to தி நன்..இந்த வாரம் திரையரங்குகளில் வெளிவர இருக்கும் படங்களின் லிஸ்ட்!

தளபதி 68 நடிகர்-நடிகைகள்:

விஜய்யின் 68வது படத்தில் நடிக்க இருப்பதாக பல நடிகர் நடிகைகளின் பெயர்கள் அடிபடுகின்றன. குறிப்பாக, பகவதி படத்தில் நடிகர் விஜய்க்கு தம்பியாக நடித்த ஜெய், இந்த படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் மூலம் கிட்டத்தட்ட 21 வருடங்களுக்கு பிறகு அவர் விஜய்யுடன் சேர்ந்து நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், ஜெய்க்கு ஜோடியாக தளபதி 68 படத்தில் நடிக்க அபர்ணா தாஸ் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே விஜய்யுடன் சேர்ந்து ‘பீஸ்ட்’ படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Prashanth

இவர்கள் மட்டுமன்றி, நடன கலைஞரும் இயக்குநரும் நடிகருமான பிரபு தேவாவும் இப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யுடன் பிரபு தேவா பல படங்களில் இதற்கு முன்னர் பணிபுரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

இரண்டு வேடங்களில் விஜய்..? 

 தளபதி 68 படத்தில் நடிகர் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒரு விஜய் இளைஞராகவும் இன்னொரு வேடத்தில் வரும் விஜய் கொஞ்சம் வயது மூத்தவராகவும் இவர் வருகிறாராம். இதில், இளைஞராக நடிக்கும் விஜய்க்கு பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்க இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. வயது மூத்த விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடிப்பதாக சில தகவல்கள் வெளியானது. இதையடுத்து ஜோதிகா விஜய்யுடன் நடிக்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. கடைசியாக ஜாே-விஜய் ஆகிய இருவரும் ‘திருமலை’ படத்தில் நடித்திருந்தனர். 

வேறு இரண்டு கதாநாயகிகள்..

ஜோதிகா நடிக்க மறுத்த கதாப்பாத்திரத்தில் அவருக்கு பதிலாக வேறு இரண்டு கதாநாயகிகளை நடிக்க வைக்க ‘தளபதி 68’ படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனராம். விஜய்யுடன் பல படங்களில் ஒன்று சேர்ந்து நடித்து ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தவர் சிம்ரன். ‘வசீகரா’ படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்திருந்தவர் சினேகா. இவர்கள் இருவரில் ஒருவரை விஜய்க்கு ஜோடியாக நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் படக்குழுவினர் குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | நடிகை திவ்யா ஸ்பந்தனா இறந்துவிட்டதாக வதந்தி! பொய் தகவல் பரவ காரணம் என்ன..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News