Rajinikanth Wanted To Divorce His Wife : தமிழ் திரையுலகில், மூத்த நடிகராகவும், முக்கியமான நடிகராகவும், சூப்பர் ஸ்டார் நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவர் குறித்து பழைய நடிகை ஒருவர் பேசியிருக்கும் நேர்காணல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்தின் திரை வாழ்க்கை!
தென்னிந்தியாவின் பெரும்பாலான மக்களுக்கு பிடித்த நடிகராக விளங்கி வருகிறார், ரஜினிகாந்த். 1975-ல் அபூர்வ ராகங்கள் படம் மூலம் அறிமுகமான இவர், இப்போது தனது 74வது வயதிலும் பல இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுத்து வருகிறார். முதுமை தாேற்றம் முகத்தில் தெரிந்தாலும், அவர் நடிப்பிலும் நடையிலும் 20 வயது இளைஞனை போல அதே துள்ளளுடன் நடித்து வருகிறார். இவர் குறித்த வீடியோக்கள் அவ்வப்பாேது இணையத்தில் வைராகி வருவது வழக்கம். அந்த வகையில், சமீபத்தில் பழைய நடிகை ஒருவர் சித்ரா லக்ஷமனனுக்கு கொடுத்திருக்கும் நேர்காணல் வைரலாகி வருகிறது.
19 வயது நடிகை மீது ஆசைப்பட்ட ரஜினி!
நடிகர் ரஜினிகாந்த், ஒரு சில நடிகைகளுடன் தொடர்ந்து பல படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார். அப்படி அவர் 1986 முதல் 1989 வரை அமலாவுடன் தொடர்ந்து 4 படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார். கோடை மழை படத்தில் முதன் முதலில் இவர்கள் ஒன்றாக சேர்ந்து நடிக்க, இவர்களின் ஜோடி மக்களுக்கு பிடித்து போனது. இதையடுத்து, வேலைக்காரன், கொடி பறக்குது, மாப்பிள்ளை உள்ளிட்ட படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்தனர்.
ஒன்றாக படங்களில் சேர்ந்து நடிக்கும் சமயத்தில், அமலாவிற்கும் ரஜினிக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாக பல ஆண்டுகளாகவே ஒரு தகவல் இருக்கிறது. இதில், வேலைக்காரன் படத்தில் நடித்து காெண்டிருந்த போது, அமலா-ரஜினியின் உறவு அடுத்த கட்டத்தை எட்ட இருந்ததாம். அப்போது, அமலாவிற்கு வயது 19, ரஜினிக்கு வயது 36.
அப்போது ரஜினி திருமணம் ஆனவராக இருந்தார். இந்த சமயத்தில், அமலாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட ரஜினிகாந்த், தனது மனைவியை விவாகரத்து செய்ய தயாராக இருந்ததாகவும், அமலாவை திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருந்ததாகவும் கூறப்பட்டது. இதைத்தான், அந்த பழைய நடிகையும் தனது நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார்.
Rajini was 36 yrs old then while Amala was 19!.. She acted in movies like Velaikkaaran (1987), Kodi Parakkudhu (1988) & Maapillai (1989) with Rajini.. Rajini wanted to divorce his wife & marry Amala.. He & his wife Latha were seperated for a year for this reason. pic.twitter.com/EhotTdCO4u
— Viber Raja (@Viberraja) December 13, 2024
இந்த பிரச்சனை காரணமாக, ரஜினியும் அவரது மனைவி லதாவும் பேச்சுவார்த்தை இன்றி 1 வருடம் பிரிந்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது. அப்போது, தன்னை ரஜினி விவாகரத்து செய்ய இருக்கும் விஷயத்தை கேள்விப்பட்டு லதா, கே.பாலச்சந்தரை அணுகியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ரஜினியை திட்டிய பாலச்சந்தர், இதையெல்லாம் விட்டுவிட்டு லதாவுடன் சேர்ந்து வாழுமாறு அறிவுருத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | தனக்கு தாயாக நடித்தவரையே காதலித்த கமல்ஹாசன்! எந்த நடிகை தெரியுமா?
அமலாவின் திருமணம்..
நடிகை அமலாவிற்கு 1992ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவுடன் திருமணம் நடைப்பெற்றது. இருவரும் இணைந்து, சில தெலுங்கு படங்களில் ஒன்றாக நடித்த பின்னர் காதலிக்க ஆரம்பித்து, பின்னர் இல்வாழ்க்கையில் இணைந்தனர். இதில், நாகார்ஜுனா, ஏற்கனவே லக்ஷமி என்பவரை திருமணம் செய்து விவாகரத்து செய்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது உண்மையா?
ரஜினி-அமலாவிற்கு இடையேயான உறவை உறுதிப்படுத்தும் வகையிலான ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆனால், அவருடன் நடித்தவர்கள் தற்போது கொடுத்து வரும் நேர்காணலில் இருந்துதான் இது போன்ற தகவல்கள் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | 16 வயது ஸ்ரீதேவியை பெண் கேட்க சென்ற ரஜினி! சர்ச்சையில் சிக்கிய சூப்பர் ஸ்டார்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ