சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்

Last Updated : Jul 11, 2017, 11:56 AM IST
சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த் title=

கடந்த மே மாதம் 28-ம் தேதி இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ‘காலா’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது.

இதற்காக நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மே 27-ம் தேதி மும்பைக்கு சென்றார். அங்கு 11 நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டார். மேலும் ஜூன் 8-ம் தேதி மும்பையில் இருந்து சென்னை திரும்பினார்.

‘காலா’ படத்தின் 2-வது கட்ட படப்பிடிப்புக்காக மீண்டும் கடந்த மாதம் 22-ம் தேதி மாலை சென்னையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் மும்பைக்கு புறப்பட்டு சென்றார். மும்பையில் 5 நாள் படப்பிடிப்புக்கு பின்னர், அங்கிருந்து அமெரிக்காவுக்கு சென்றார்.

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் ‘காலா’ படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. அதில் கலந்துகொள்ள நேற்று இரவு நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவில் சென்னை வந்தார். 

Trending News