நடிகர் சந்தானத்துக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
கட்டிட ஒப்பந்ததாரர் மற்றும் நடிகர் சந்தானம் ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பும வழக்கில் நடிகர் சந்தானத்துக்கு சில நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, நடிகர் சந்தானம் கல்யாண மண்டபம் கட்டிடம் கட்ட தர கட்டுமான ஒப்பந்ததாரர் சண்முகசுந்தரம் (54) என்பவரிடம் சுமார் 3 கோடி பணம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், கட்டுமான ஒப்பந்ததாரர் சண்முகசுந்தரம் உறுதி அளித்தபடி திருமண மண்டபத்தை கட்டிக் கொடுக்கவில்லை. பணத்தை சந்தானம் தரப்பு திருப்பி கேட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட தொகையை திருப்பி கொடுத்துவிட்டு, மீதி பணத்தை கொடுக்காமல் இருந்துள்ளார் சண்முக சுந்தரம்.
இதனால், பணத்தை திரும்ப கேட்ட போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கடைசியில் இந்த வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது.
இச்சம்பவத்தை அறிந்த போலீசார் அந்த பகுதிக்கு சென்றுள்ளனர். ஆனால் அங்கு சந்தானம் இல்லாததால், அவர் தலைமறைவு ஆகிவிட்டார் என ஊடங்களில் செய்திகள் பரவின.
இரு தரப்பினரும் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து, முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சந்தானம் மனுத் தாக்கல் செய்துள்ளார்.