சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா நடிப்பில் வெளியான படம் புஷ்பா: தி ரைஸ். இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடி்த்திருந்தனர். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி வசூலை குவித்தது.
இதற்கிடையில் இப்படம் திரைக்கு வந்து பல நாட்கள் ஆனபோதிலும், இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் யாவும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிட்டது. இப்படத்திலுள்ள 'ஊ சொல்றியா மாமா, சாமி சாமி, ஸ்ரீவல்லி' போன்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலமானது. இந்த பாடல்களுக்கு சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நடனமாடி அதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர், இதனை பலரும் சேலஞ்சாக எடுத்துக்கொண்டு நடனமாடி வருகின்றனர்.
மேலும் படிக்க | Viral Video: என்ன ஒரு கம்பீர நடை; இதுவல்லவோ அசல் ‘பாயும் புலி’
இந்த நிலையில் தற்போது தாதாசாஹேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகள் 2022 இல் இந்த ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான விருதை புஷ்பா: தி ரைஸ் திரைப்படம் வென்றுள்ளது. இது தொடர்பாக தாதாசாஹேப் பால்கே சர்வதேச திரைப்படவிழா ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள அறிவிப்பில் கூறியதாவது.,
Congratulations to 'Pushpa: The Rise' for winning the award for Film Of The Year at Dadasaheb Phalke International Film Festival Awards2022. Your hard work and perseverance have paid off. #dpiff #dpiff2022 #dpiffawards #dpiffdiaries #dpiffglimpse #dpifflegacy #dpiffawards2022 pic.twitter.com/XSIKCYa23T
— Dadasaheb Phalke International Film Festival (@Dpiff_official) February 20, 2022
தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகள் 2022 இல், ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றதற்காக 'புஷ்பா: தி ரைஸ்' படத்திற்கு வாழ்த்துகள். படக்குழுவின் கடின உழைப்பும் விடாமுயற்சியும் பலனளித்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புஷ்பா படக்குழுவினர் தற்போது மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR