அரசியல் கட்சியில் நடிகர் விவேக்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து டிவிட்!

அரசியல் கட்சியில் சேரப் போவதாக பரவிய வதந்திக்கு நடிகர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

Last Updated : Mar 31, 2019, 02:51 PM IST
அரசியல் கட்சியில் நடிகர் விவேக்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து டிவிட்!

அரசியல் கட்சியில் சேரப் போவதாக பரவிய வதந்திக்கு நடிகர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

நடிகர் விவேக் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் அரசியல் கட்சி ஒன்றில் இணைந்து பிரச்சாரம் செய்யவுள்ளார் என வதந்தி பரவியது. 

இந்நிலையில் தற்போது வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இதன் மூலம் அனைத்து ஊடகங்களுக்கும் நான் தெரிவிப்பது. நான் எந்த கட்சியிலும், அமைப்பிலும் இல்லை. பொதுமக்களில் ஒருவன். ஓட்டுப்போடுவது ஜனநாயகக் கடமை. அதை செவ்வனே செய்வேன். அனைத்து கட்சியினர், தலைவர்கள் என் நண்பர்கள்.வதந்திகளை நம்ப வேண்டாம்.

இவ்வாறு விவேக் தெரிவித்துள்ளார்.

More Stories

Trending News