சிறப்பான செயல்!! தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா ரூ.25 லட்சம் நிதியுதவி.

நடிகை மற்றும் நடிகர் சூரியாவின் மனைவியான ஜோதிகா தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Aug 8, 2020, 01:49 PM IST
சிறப்பான செயல்!! தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா ரூ.25 லட்சம் நிதியுதவி.
Pic Courtesy: Instagram

சென்னை: நடிகை மற்றும் நடிகர் சூரியாவின் மனைவியான ஜோதிகா (Jyothika) இதனை திரைப்பட இயக்குநர் இரா.சரவணன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். இவரின் செயலை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

உரிய வசதிகள் இல்லாமல் இருந்து வந்த தஞ்சை மருத்துவமனைக்கு (Thanjavur Government Hospital) தேவையான உபகரணங்கள் வாங்க தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் (Health minister of Tamil Nadu) விஜயபாஸ்கரிடம் ₹25 லட்சம் நடிகை ஜோதிகா வழங்கினார். அவரின் முயற்சியை பாராட்டி அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நன்றி தெரிவித்துள்ளனர்.

ALSO READ | இன்னும் மாறாத அரசு பள்ளிகளின் நிலை - வேதனையை வெளிப்படுத்திய நடிகர் சூர்யா

முன்னதாக தமிழக சுகாதாரத்துறைஅமைச்சர் விஜயபாஸ்கருடன் (C. Vijayabaskar) கலந்து ஆலோசித்து உள்ளார். அதன் பிறகு மருத்துவமனைக்கு தேவையான உதவிகளை அகரம் அறக்கட்டளை முலம் வழங்கினார். இதனை திரைப்பட இயக்குநர் இரா.சரவணன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Agaram Foundation