முந்தானை முடிச்சு ரீமேக்கில் சசிக்குமார் - ஐஸ்வர்யா ராஜேஷ்? செம்ம செலக்ஷன் பாஸ்

1983 ஆம் ஆண்டு ஏவிஎம் தயாரிப்பில் பாக்யராஜ், ஊர்வசி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் தான் முந்தானை முடிச்சு. 

Last Updated : Sep 19, 2020, 01:26 PM IST
    1. மூத்த திரைப்படத் தயாரிப்பாளர் பாக்யராஜ் மீண்டும் ரீமேக்கிற்கான வசனம் மற்றும் திரைக்கதையை எழுதி வருகிறார்,
    2. JSB Film Studios-ன் JSB சதீஷ் இப்படத்தை தயாரிக்கிறார். ஊர்வசி வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.
    3. இப்படம் 2021ம் ஆண்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தானை முடிச்சு ரீமேக்கில் சசிக்குமார் - ஐஸ்வர்யா ராஜேஷ்? செம்ம செலக்ஷன் பாஸ் title=

1983 ஆம் ஆண்டு ஏவிஎம் தயாரிப்பில் பாக்யராஜ், ஊர்வசி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் தான் முந்தானை முடிச்சு (Munthanai Mudichu). இந்த படத்தின் ரீமேக்கிற்காக இயக்குனர் பாக்யராஜுடன் (Bhagyaraj) தற்போது நடிகர் சசிகுமார் (Sasikumar) கைகோர்த்ததாக செய்திகள் வெளியாகி இருந்தது. தற்போது, சமீபத்திய விஷயம் என்னவென்றால், கடைசியாக தமிழில் 'வானம் கொட்டட்டும்' படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் (Aishwarya Rajesh), இப்படத்தில் பெண் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். 

மூத்த திரைப்படத் தயாரிப்பாளர் பாக்யராஜ் மீண்டும் ரீமேக்கிற்கான வசனம் மற்றும் திரைக்கதையை எழுதி வருகிறார், ஆனால் அவர் மீண்டும் படத்தை இயக்குகிறாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் உற்சாகமாக இருப்பதாக தெரிகிறது. இது குறித்து நடிகை  ஐஸ்வர்யா ராஜேஷ் (Aishwarya Rajesh) தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில்., 

 

ALSO READ | மதுரை காவல்துறையினருடன் இணைந்த நடிகர் சசிகுமார்

"தமிழ் சினிமாவின் மைல்கல் படங்களில் ஒன்றான #MunthanaiMudichu இன் ரீமேக்கின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமிதம் மற்றும் மரியாதை! "(Sic)

 

 

 

JSB Film Studios-ன் JSB சதீஷ் இப்படத்தை தயாரிக்கிறார். ஊர்வசி வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இப்படம் 2021ம் ஆண்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1983 ஆம் ஆண்டு ஏவிஎம் தயாரிப்பில் பாக்யராஜ், ஊர்வசி நடிப்பில் வெளியா முந்தானை முடிச்சு படம் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் பல நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அந்த காலகட்டத்தில் ரூ. 30 லட்சம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், கிட்டத்தட்ட ரூ. 4 கோடி வசூல் செய்தது.

 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

ALSO READ | விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஆசை: ஐஸ்வர்யா ராஜேஷ்

Trending News