விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஆசை: ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், அவருக்கு மட்டும் தங்கையாக நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

Updated: Feb 9, 2020, 12:29 PM IST
விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஆசை: ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், அவருக்கு மட்டும் தங்கையாக நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் கதாநாயகியாகவும், குழந்தைகளுக்கு அம்மாவாகவும், தங்கையாகவும் நடித்துள்ளார். சமீபத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்திலும், தற்போது விக்ரம் பிரபுக்கு தங்கையாக ‘வானம் கொட்டட்டும்’ படத்திலும் நடித்துள்ளார். 

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் மற்ற ஹீரோக்களுக்கு தங்கையாக நடிப்பேன், ஆனால் விஜய்க்கு மட்டும் தங்கையாக நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் எனக்கு விஜய்க்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என ஆசை என்று தெரிவித்துள்ளார்.