உங்களை இயக்கும் நாள் வரும் என நினைத்ததே இல்லை.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருக்கம்

Lal Salaam, Aishwarya Rajinikanth Emotional Statement: நான் உங்களை பார்க்கிறேன்… உங்களை இயக்கும் நாள் வரும் என்று எப்போதும் நினைத்ததை இல்லை என்று கூறி இன்ஸ்டாகிராமில் உருக்கமாக போஸ்ட் போட்டிருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 5, 2023, 11:24 AM IST
  • லால் சலாம் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது.
  • ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் மிக முக்கிய கௌரவ வேடத்தில் நடித்து கிறார்.
உங்களை இயக்கும் நாள் வரும் என நினைத்ததே இல்லை.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருக்கம் title=

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருக்கமான பதிவு வைரல்: ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷை வைத்து 3 படத்தை இயக்கினார். கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான இந்தப்படத்தில் ஸ்ருதி ஹாசன் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். இதில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலை வெறி என்ற பாடல் உலக அளவில் ஹிட்டடித்தது. படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வை ராஜா வை படத்தை இயக்கினார். இதில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாகவும், ப்ரியா ஆனந்த் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். படத்தில் தனுஷ் கொக்கி குமார் கதாபாத்திரத்தி சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். படம் அவ்வளவான வரவேற்பைப் பெறவில்லை. இதனையடுத்து இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருந்த ஐஸ்வர்யா பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கினார். இந்த ஆல்பம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது.

இந்தச் சூழலில் தனுஷுடனான பிரிவுக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 'லால் சலாம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். மேலும் இதில் ரஜினிக்கு தங்கையாக ஜீவிதா ராஜசேகர் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. மேலும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aishwaryaa Rajinikanth (@aishwaryarajini)

மேலும் படிக்க | பிரபல கில்லாடி கொள்ளையனின் கதையா ஜப்பான் திரைப்படம்? முழு விவரம் இதோ..!

தற்போது லால் சலாம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படப்பிடிப்பிற்கு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை பார்ப்பதற்காக திரளான மக்கள் படப்பிடிப்பு தளத்திற்கு குவிந்தனர். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களோடு படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புதிய புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 

"நான் உங்களைப் பார்த்து வளர்ந்தேன்.. உங்களை இயக்கும் நாள் வரும் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை .. நான் உங்களை ரசித்திருக்கிறேன் ..நான் உங்களை வணங்குகிறேன்.. உங்களுடன் சேர்ந்து இந்த உலகை பார்க்கிறேன்... நீங்கள் தான் நான் என்பதை உணர்கிறேன்...ஒவ்வொரு நாளும் அப்பா..இன்னும் இன்னும் அதிகம் உங்களை நாம் நேசிக்கிறேன்" என எமோஷனாக பதிவிட்டு இருக்கிறார்.

 லால் சலாம் படத்தில் ரஜினிகாந்துக்கு கவுரவத் தோற்றம் தான் என்றாலும் சுமார் ஒரு மணிநேரம் அவரை படத்தில் பார்க்கலாமாம். இரண்டு சண்டை காட்சிகளில் வேறு மாஸ் கட்டுகிறாராம் ரஜினி. மேலும் இந்த படம் கிரிக்கெட் சார்ந்த திரைப்படம் என்பதால் திரைப்படத்தில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவரான கபில் தேவ் அவர்கள் முதல்முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து இப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | தளபதி விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட CWC புகழ்! ஏன் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News