ராகவா லாரன்ஸை இயக்குகிறாரா ஐஸ்வர்யா ரஜினிகாந்த்?

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸை சந்தித்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 3, 2023, 08:21 AM IST
  • ஐஸ்வர்யா தனுஷ் - லாரன்ஸ் சந்திப்பு
  • புதிய படம் குறித்து இருவரும் ஆலோசனை
  • விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என தகவல்
ராகவா லாரன்ஸை இயக்குகிறாரா ஐஸ்வர்யா ரஜினிகாந்த்?  title=

தனுஷூடனான பிரிவுக்குப் பிறகு திரைப்படங்கள் இயக்குவதில் முழுவீச்சாக களமிறங்கியிருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், விரைவில் தன்னுடைய ஆல்பம் ஒன்றை வெளியிட உள்ளார். தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் அவர் உருவாக்கியுள்ள ‘பயணி’ ஆல்பத்துக்கு அனிரூத் இசையமைத்துள்ளார். சூட்டிங் நிறைவடைந்திருக்கும் நிலையில், ஆல்பத்துக்கான மற்ற வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

மேலும் படிக்க | ரஜினிகாந்த் படத்தில் வைகைப் புயல் - கலக்கும் நெல்சன் திலீப்குமார்

இந்த ஆல்பம் குறித்து கேள்விப்பட்ட நடிகர் பிரபுதேவா, ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு பிரத்யேகமாக வாழ்த்து ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், ஒன்றை தேர்வு செய்வதில் மிகுந்த அக்கறையோடும், சலெக்டிவாகவும் இருக்கும் ஐஸ்வர்யா, ஒரு ஆல்பம் உருவாக்கியிருக்கிறார் என்றால், அது நிச்சயம் சிறப்பாக இருக்கும். ஐஸ்வர்யாவின் டீம் குறித்து கேள்விப்பட்டேன். அதில் இருக்கும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் திறமை வாய்ந்தவர்கள். அதனால், ஆல்பம் நிச்சயம் வெற்றி பெறும், அவர்களுக்கு என்னுடைய வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஆல்பம் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியிருப்பதால், படம் ஒன்றை இயக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார் ஐஸ்வர்யா. ஏற்கனவே சிம்புவை வைத்து படம் ஒன்றை அவர் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், சிம்பு இப்போது பத்து தல உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்போதைக்கு அவருடைய கால்ஷீட் கிடைக்காது என்பதால், அந்தப் படத்தை ஒத்திவைத்துவிட்டு மற்றொரு படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அதற்காக இயக்குநர் ராகவா லாரன்ஸை, நேரில் சந்தித்த ஐஸ்வர்யா அந்த புகைப்படங்களையும் இணையத்தில் பதிவிட்டுள்ளார். அவரை சந்த்தத பிறகு இன்னும் பல யோசனைகள் றெக்கை கட்டி பறந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால், விரைவில் லாரன்ஸ் - ஐஸ்வர்யா தனுஷ் படத்தின் அறிவிப்பை எதிர்பார்க்கலாம். 

மேலும் படிக்க | தனுஷிற்கு இன்னொரு வாய்ப்பு கொடுப்பாரா ஐஸ்வர்யா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News