ரெடியாகும் தல ரசிகர்கள்..!! புத்தாண்டு அன்று விஸ்வாசம் டீசர் ரிலீஸ் என தகவல்

வரும் புத்தாண்டு அன்று விஸ்வாசம் படத்தின் டீசர் வெளியாகும் என தகவல்கள் வந்துள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 25, 2018, 12:12 PM IST
ரெடியாகும் தல ரசிகர்கள்..!! புத்தாண்டு அன்று விஸ்வாசம் டீசர் ரிலீஸ் என தகவல் title=

சிவா இயக்கத்தில் தல அஜித், நயன்தாரா நடிக்க, டி இமான் இசையில் உருவாகி வரும் திரைப்படம் 'விஸ்வாசம்'. ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு இசை டி.இமான் அமைத்துள்ளார். விஸ்வாசம் படத்தின் பாடல்கள் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்தநிலையில் தணிக்கை குழுவுக்கு விஸ்வாசம் படம் அனுப்பப்பட்டது. இந்த படத்திற்கு "யூ" சான்றிதழ் கிடைத்துள்ளது. 

விஸ்வாசம் படம் வரும் பொங்கலுக்கு வெளிவர உள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் படம் விற்கப்பட்டு உள்ளது. ஆனால் படத்தின் டீசரோ, ட்ரைலரோ இன்னும் படக்குழு வெளியிடவில்லை. இதனால் ரசிகர்கள் எப்பொழுது டீசர் மற்றும் ட்ரைலர் வெளிவரும் எனக் கேட்டு சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

இதனையடுத்து இந்த வாரம் வியாழக்கிழமை அல்லது வரும் புத்தாண்டு அன்று விஸ்வாசம் படத்தின் டீசர் வெளியாகும் என தகவல்கள் வந்துள்ளது. ஆனால் இதுக்குறித்து அதிகாரபூர்வ தகவல் இன்னும் படக்குழு வெளியிடவில்லை.

பொங்கல் தினத்தன்று "விஸ்வாசம்" மற்றும் "பேட்ட" திரைக்கு வர உள்ளநிலையில், ஏற்கனவே ரஜினி நடித்திருக்கும் "பேட்ட" படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News