பொறாமை வேண்டாம் - ரசிகர்களுக்கு அஜித் செய்திருக்கும் அட்வைஸ்

பொறாமையோ, வெறுப்புணர்வோ வேண்டாமென நடிகர் அஜித் ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Nov 17, 2022, 04:14 PM IST
  • துணிவு படம் பொங்கலுக்கு ரிலீஸ்
  • ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது
  • அஜித் ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்
பொறாமை வேண்டாம் - ரசிகர்களுக்கு அஜித் செய்திருக்கும் அட்வைஸ் title=

ஹெச்.வினோத், அஜித் கூட்டணியில் வெளியான முதல் இரண்டு படங்களும் பெரிதாக சோபிக்கவில்லை. இதனால் சதுரங்க வேட்டை, தீரன் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த வினோத்துக்கு என்னாச்சு என பலர் முணுமுணுக்க தொடங்கினார்கள். அதேசமயம் வலிமை படத்தில் பலரின் தலையீடு இருந்ததால் தான் நினைத்தபடி வினோத்தால் வலிமை படத்தை எடுக்க முடியவில்லை என கோலிவுட்டில் பேச்சு எழுந்தது. ஆனால் துணிவு படம் முழுக்க முழுக்க வினோத்தின் படமாகவே உருவாகியிருப்பதாகவும், வங்கி கொள்ளையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதாகவும்  கூறப்படுகிறது. க்ரைம் ஏரியாவில் வினோத் கில்லி என்பதால் துணிவு நிச்சயம் ஹிட்டடிக்கும் என்கின்றனர் ஏகே ரசிகர்கள்.

துணிவு பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இதனால் படத்தின் ப்ரோமோஷனுக்கோ, படத்துக்கு தியேட்டர் கிடைப்பதிலோ எந்த சிக்கலும் இருக்காது என கருதப்படுகிறது.வாரிசும் பொங்கலுக்கு வெளிவருவதால் இந்தப் பொங்கல் சினிமா ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கிறது.

இந்நிலையில், அஜித் தனது ரசிகர்கள்க்கு அட்வைஸ் செய்திருக்கிறார். அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தன் ட்விட்டர் பக்கத்தில் ஸ்க்ரீன் ஷாட் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில், “வெறுப்புணர்வோ, பொறாமையோ வேண்டாம். எதிர்மறை சிந்தனைகளை கைவிட்டு, உயர்ந்த இலக்குடன் செயல்பட வேண்டும்" 

முன்னதாக,  அஜித் ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை எழுதியிருந்தார். அந்தப் பதிவில் ஒரு நாள் ராப் சாங் படப்பிடிப்பின் போது நாங்க ஒரு நாலு பேரு ஓராம நின்னுட்டு இருந்தோம்.எங்கள் பாத்து ’ஏன் நின்னுட்டு இருக்கீங்க’ வேலை பாத்து டயர்டா இருப்பீங்கன்னு உட்காருங்கன்னு சொன்னாரு. அதுக்கு ஏன் பக்கத்துல இருந்த பையன் பரவால சார்-னு சொன்னதுக்கு தல என்னா தெரியுமா சொன்னாரு ‘சார்-னு சொல்லாதடா அண்ணான்னு சொல்லுன்னு சொன்னாங்க” என குறிப்பிட்டிருந்தார். 

மேலும் படிக்க | வைரலாகும் ஐஸ்வர்யா ராயின் லிப்லாக் புகைப்படம்! அதுவும் யார்கூட தெரியுமா?

மேலும் படிக்க | HBDRoja: நடிகை டு அமைச்சர்: ரோஜா அரசியலில் பெண் ஆளுமையாக உருவானது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News