புதிய சாதனையை படைத்த `விவேகம்' டீசர்

Last Updated : May 12, 2017, 09:55 AM IST
புதிய சாதனையை படைத்த `விவேகம்' டீசர் title=

'தல' அஜீத்தின் 'விவேகம்' திரைப்பட டீசர் அதிகாரப்பூர்வமாக நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டது. டீசரைப் பார்த்தவர்கள் அதை திரும்ப திரும்ப பலமுறை விரும்பி பார்க்கும் அளவுக்கு தல புயல் கடுமையாக வீசியுள்ளது என்று கூட சொல்லலாம். 

சிவா இயக்கத்தில் வெளியாக உள்ள `விவேகம்' படத்தில் விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். அனிருத் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ரூபன் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டிருக்கிறார்.

`விவேகம்' டீசர் வெளியாகி தற்போது வரை 50 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இதில் யூடியூப்பில் மட்டும் 38 லட்சத்திற்கும் மேற்பட்டோர் `விவேகம்' டீசரை பார்த்து ரசித்திருக்கின்றனர். 

நேற்று நள்ளிரவு சரியாக 12.01-க்கு வெளியான டீசர், 12 மணிநேரத்தில் 50 லட்சம் பார்வையாளர்களை பெற்று புதிய சாதனையை படைத்துள்ளது. 

இந்நிலையில், `விவேகம்' 12 மணிநேரத்திற்குள் மொத்தமாக 50 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் வெளியான படங்களில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான `கபாலி' படத்தின் டீசர் 24 மணிநேரத்தில் 50 லட்சம் பார்வையாளர்களை பெற்றிருந்தது. அதனைத்தொடர்ந்து இரண்டாவது இடத்தில் `கட்டமராயுடு' 57 மணிநேரத்தில் 50 லட்சமும், மூன்றாவது இடத்தில் `பைரவா' 76 மணிநேரத்தில் 50 லட்சம் பார்வையாளர்களையும் பெற்றிருந்தது. இந்நிலையில், 12 மணிநேரத்திலேயே 50 லட்சம் பார்வையாளர்களை பெற்று `விவேகம்' புதிய சாதனை படைத்திருக்கிறது.

Trending News