'புஷ்பா' பிடியில் சிக்கிய வார்னர்: வைரல் ஆகும் வேற லெவல் ஆக்ஷன் வீடியோ

புஷ்பா படத்தின் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. புஷ்பா பிடியில் சிக்காதவர்கள் யாரும் இல்லை. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 26, 2022, 02:58 PM IST
  • சமீபத்திய காலங்களில் மக்களின் எக்கச்சக்க அன்பையும் பாசத்தையும் அள்ளிய படம் 'புஷ்பா'.
  • புஷ்பா படத்தின் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
  • புஷ்பா பிடியில் சிக்காதவர்கள் யாரும் இல்லை.
'புஷ்பா' பிடியில் சிக்கிய வார்னர்: வைரல் ஆகும் வேற லெவல் ஆக்ஷன் வீடியோ title=

இந்தியாவில் ஒவ்விரு ஆண்டும் பல படங்கள் வெளியிடப்படுகின்றன. எனினும், ஒரு சில படங்களின் தாக்கம் மக்கள் மனதில் மிக அதிகமாக இருக்கின்றது. சமீபத்திய காலங்களில் மக்களின் எக்கச்சக்க அன்பையும் பாசத்தையும் அள்ளிய படம் 'புஷ்பா'!!

புஷ்பா படத்தின் (Pushpa Movie) மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. புஷ்பா பிடியில் சிக்காதவர்கள் யாரும் இல்லை. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை இப்படத்தை ஆராதிக்கிறார்கள். இதற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னரும் விதிவிலக்கல்ல. 

டேவிட் வார்னர், இந்தப் படத்தின் பாடல்களுக்கு நடனமாடி, சமூக வலைதளங்களில் ஒன்றன் பின் ஒன்றாக பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். ஏற்கனவே அவர் வெளியிட்ட வீடியோக்கள் படு வைரல் ஆகியுள்ள நிலையில், தற்போது அவர் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். ஆனால், இந்த வீடியோவில் அவர் நடனமாடவில்லை. படத்தின் ஆக்ஷன் காட்சிகளை தனது பாணியில் தந்து அசத்தியுள்ளார். 

முழுமையாக புஷ்பாவாக மாறிப்போனார் வார்னர்:

வைரலாகி வரும் இந்த வீடியோவில் (Viral Video), டேவிட் வார்னர் புஷ்பா படத்தில் இருந்து சில சிறந்த ஆக்‌ஷன் காட்சிகளை தேர்வு செய்திருப்பதை காண முடிகின்றது. பின்னர் இந்த காட்சிகளில் அவர் படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுனின் முகத்தில் தனது முகத்தை மர்ஜ் செய்திருப்பதையும் பார்க்க முடிகின்றது. அல்லு அர்ஜுனின் முகத்தில் வார்னரின் முகம் மிகவும் நேர்த்தியாக மர்ஜ் செய்யப்பட்டுள்ளது. வீடியோவைப் பார்த்தால், இதில் நடித்திருப்பது வார்னர்தான் என்றே தோன்றுகிறது. 

ALSO READ | Pushpa: வார்னரையும் விட்டுவைக்காத புஷ்பா - வைரல் வீடியோ

வார்னர் ஆக்ஷன் சீன்களில் சிக்சர் அடித்த அந்த வீடியோவை இங்கே காணலாம்: 

சுமார் 30 லட்சம் வியூசை அள்ளியுள்ளது

சமூக ஊடக பயனர்கள் டேவிட் வார்னரின் இந்த அவதாரத்தை மிகவும் விரும்புகிறார்கள். இவரது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

டேவிட் வார்னரின் இந்த வீடியோ வேறு லெவலில் பிரபலமாகி வருகிறது. இந்த வீடியோ இதுவரை சுமார் 3 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது என்பதிலிருந்தே இதன் பிரபலத்தைப் பற்றி அறிய முடிகிறது. இந்த வீடியோவிற்கு மக்கள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். 

ஏற்கனவே பல வீடியோக்களை செய்துள்ளார்

இது டேவிட் வார்னரின் (David Warner) முதல் புஷ்பா பட வீடியோ அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே புஷ்பா பட பாணியில் பல வீடியோக்களை வெளியிட்டு உள்ளார். சமீபத்தில், படத்தின் ‘ஸ்ரீவள்ளி’ பாடலின் ஹூக் ஸ்டெப்ஸ் வீடியோவையும் பகிர்ந்தார். அதுவும் இணையத்தில் படு வைரல் ஆனது. 

வார்னர் மட்டுமின்றி, பிராவோ உட்பட பல கிரிக்கெட் வீர்ரர்கள் புஷ்பாவால் ஈர்க்கப்பட்டுள்ளனர். சொல்லப்போனால், விக்கெட் விழும்போது அதை கொண்டாட புஷ்பா பாடலின் அசைவுகளைதான் பயன்படுத்துகின்றனர். புஷ்பாவின் தாக்கம் அந்த அளவில் உள்ளது!!

ALSO READ | Viral Video: உள்ளூர் ரயிலில் 'புஷ்பா’ திரைப்பட பாணியில் கலக்கும் இளைஞர்! கடுப்பில் பயணிகள்...

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News