'சூர்யா 37' படத்தில் இருந்து நடிகர் அல்லு சிரிஷ் விலகல்!

நடிகர் சூர்யாவின் அடுத்த படத்தில் இருந்து தெலுங்கு நடிகர் அல்லுசிரிஷ் விலகியதாக தெரிவித்துள்ளார்!

Last Updated : Jul 20, 2018, 03:37 PM IST
'சூர்யா 37' படத்தில் இருந்து நடிகர் அல்லு சிரிஷ் விலகல்!

நடிகர் சூர்யாவின் அடுத்த படத்தில் இருந்து தெலுங்கு நடிகர் அல்லுசிரிஷ் விலகியதாக தெரிவித்துள்ளார்!

சிங்கம் 3 படத்திற்கு பின் நடிகர் சூர்யா, இயக்குனர் கே.வி ஆனந்த் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு ('சூர்யா 37') இதுவரை பெயர் சூட்டப்படவில்லை. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் தொடங்கியது

இந்நிலையில் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த பிரபல தெலுங்கு நடிகர் அல்லுசிரிஷ் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக செய்திகள் வெளியாகின. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது... 'சூர்யா 37' படத்தின் படப்பிடிப்பு தேதியும் தான் நடித்து கொண்டிருக்கும் மற்றொரு  படத்தின் படப்பிடிப்பு தேதியின் கால்ஷீட்டும் ஒத்து வராததால் இந்த படத்தில் இருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாக பதிவிட்டுள்ளார் எனவே இந்த படத்தில் அல்லுசிரிஷூக்கு பதிலாக வேறொரு பிரபல நடிகரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதே படத்தில் மோகன்லால், ஆர்யா, பொமன் இரானி, சமுத்திரக்கனி ஆகிய பிரபல நடிகர்களும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More Stories

Trending News