கண்தானம் செய்யும் நடிகை: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நடிகை அமலாபால் பிரச்னைக்குரிய சொகுசுக் காரிலேயே புதுச்சேரி சென்று, அங்கு நடந்த விழாவில் கண்தானம் செய்துள்ளார்.  

Last Updated : Mar 1, 2018, 01:21 PM IST
கண்தானம் செய்யும் நடிகை: அதிர்ச்சியில் ரசிகர்கள்! title=

பிரபல நடிகை அமலாபால், விலை உயர்ந்த சொகுசுக்காரை வாங்கி, போலியான முகவரி கொடுத்து அந்தக் காரை புதுச்சேரியில் பதிவு செய்ததன் மூலம் 20 லட்சம் ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அவர் மீது கேரளா குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, அமலாபாலை கைது செய்தனர். 

பின்னர், கேரள உயர்நீதிமன்றம் அளித்த முன்ஜாமீன் அடிப்படையில், ஒரு சில மணி நேரத்தில் சொந்த ஜாமீனில் அமலாபாலை விடுவித்தனர். தற்போது, அமலாபால் மீதான வழக்கு தொடர்ந்து நடைபெறுகிறது.

இந்நிலையில், பிரச்னைக்குரிய அந்த சொகுசுக் காரிலேயே புதுச்சேரியில் நடைபெற்ற விழா ஒன்றுக்கு சென்றுள்ளார். அமலா பாலின் சொகுசு காரை புதுச்சேரி மக்கள் ஆச்சரியமாக பார்த்த்தனர். 

இந்த விழாவில் அமலாபால் தனது கண்களை தானமாக வழங்குவதாக கையொப்பமிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

 

Trending News