மாவீரனையும், கேப்டன் மில்லரையும் கைப்பற்றிய ஓடிடி - விலை எவ்வளவு தெரியுமா?

தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் மாவீரன் ஆகிய படங்களின் ஓடிடி உரிமையை அமேசான் பெற்றுள்ளது.  

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 25, 2022, 06:44 PM IST
  • தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்கிறார்
  • சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் நடிக்கிறார்
  • இரு படங்களின் ஓடிடி உரிமையை கைப்பற்றியது அமேசான் ப்ரைம்
மாவீரனையும், கேப்டன் மில்லரையும் கைப்பற்றிய ஓடிடி - விலை எவ்வளவு தெரியுமா? title=

இந்தியாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவரான தனுஷ் சமீபத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்திருந்தார்.திரையரங்குகளில் வெளியான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து அவர் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படம் செப்டம்பர் 29ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்தச் சூழலில் அவர் சாணிக்காயிதம், ராக்கி ஆகிய படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தை சத்யஜோதி நிறுவனம் சார்பில் தியாகராஜன் தயாரிக்கிறார். படத்துக்கு கேப்டன் மில்லர் என பெயரிடப்பட்டுள்ளது. இதன் பூஜை சமீபத்தில் போடப்பட்டு ஷூட்டிங்கும் தொடங்கியது. ப்ரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் டிஜிட்டல் உரிமத்தை பெரும் தொகைக்கு விற்பனை செய்துள்ளனர்.  குறிப்பாக கேப்டன் மில்லர் திரைப்படத்தின் வெளியீட்டுக்கு பிறகான ஓடிடி உரிமத்தை அமேசான் நிறுவனம் 38 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

 

அதேபோல் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தை 34 கோடி கொடுத்து கைப்பற்றியுள்ளது.  மாவீரன் படத்தை மண்டேலா படத்தை இயக்கிய மடோனா அஸ்வின் இயக்குகிறார். தேசிய விருது வென்ற இயக்குநருடன் சிவகார்த்திகேயன் கைகோர்த்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

இதுவரை தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரின் திரைப்படங்கள் திரையரங்கு வெளியீட்டுக்கு பிறகு உரிமத்தில் இந்த அளவிற்கு விற்பனையானதில்லை என கோடம்பாக்கத்தில் பேச்சு எழுந்திருக்கிறது.

மேலும் படிக்க | நான் ஒன்றும் குழந்தை இல்லை - நயன்தாராவின் அசத்தல் பேச்சு; வைரலாகும் ப்ரோமோ

மேலும் படிக்க | என்னை வழிநடத்தும் குருசாமி ஜெயராம் - ஜெயம் ரவி நெகிழ்ச்சி ட்வீட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News