பொன்னியின் செல்வன் படத்துக்கு அமேசான் கொடுத்த விலை தெரியுமா?

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அமேசான் ப்ரைம் பல கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 12, 2022, 04:08 PM IST
  • பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ல் ரிலீஸ்
  • படத்துக்கான ஓடிடி வியாபாரம் முடிந்ததாக தகவல்
  • அதேபோல் வெளிநாட்டு வியாபாரமும் முடிந்தது
பொன்னியின் செல்வன் படத்துக்கு அமேசான் கொடுத்த விலை தெரியுமா? title=

தமிழ் இலக்கியத்தின் மணிமகுடம் என்று பலரால் கருதப்படும் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்க எம்ஜிஆர், கமல் உள்ளிட்டோர் முயன்றனர். ஆனால் அவர்களது முயற்சி பலிக்கவில்லை. இதனையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் பொன்னியின் செல்வன் உருவாகியுள்ளது. இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவிருக்கிறது. பொன்னியின் செல்வனில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி,பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். படமானது செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்திற்கான பின்னணி இசை மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். படம் வெளியாக இன்னும் 2 மாதங்கள் இருக்கும் நிலையில், அடுத்தடுத்த அப்டேட்டுகளையும், புரோமோஷன் பணிகளையும் பொன்னியின் செல்வன் குழு தொடங்கியுள்ளது.

படத்தின் டீசரும், பொன்னி நதி பார்க்கணுமே என்ற பாடலும் முதலில் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து அந்தப் படத்தின் ட்ரெய்லரும், மற்ற பாடல்களும் கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி சென்னையில் பிரமாண்டமாக வெளியிடப்பட்டது. இந்த விழாவில் ரஜினி, கமல் ஹாசன், மணிரத்னம், பொன்னியின் செல்வன் படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள், ரசிகர்கள் என பலர் கலந்துகொண்டனர். 

 

பொன்னியின் செல்வனின் ட்ரெயல்ரை பார்த்த ரசிகர்கள் தங்களது ஆதரவை கொடுத்துவருகின்றனர். மேலும் பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. படம் வெளியாக இன்னும் இரண்டு வாரங்களே இருப்பதால் படத்தின் வியாபார பணிகள் சூடுபிடித்துள்ளன.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் ப்ரைம் நிறுவனம் 125 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி இதுவரை எந்த படமும் ஓடிடிக்கு இவ்வளவு பெரிய விலைக்கு விற்கப்பட்டதில்லை எனவும் கூறப்படுகிறது.

Jayam Ravi

முன்னதாக, பொன்னியின் செல்வன் படத்தின் வெளிநாட்டு வெளியீடு வியாபாரம் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி, பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அமெரிக்காவில் சரிகம சினிமாஸ் நிறுவனமும்,  கனடாவில் KW டாக்கீஸ் நிறுவனமும், Night ED Films நிறுவனமும்,  ஐரோப்பாவில் Boleyn நிறுவனமும் வெளியிடுகின்றனர்.

மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் படத்தில் நயன்தாராவா? வைரலாகும் புகைப்படம்!

அதேபோல், மத்திய கிழக்கு நாடுகளில் PHF நிறுவனமும்ம் மலேசியாவில் லோட்டஸ் மற்றும் 5 ஸ்டார் நிறுவனங்கள் இணைந்து வெளியிடுகின்றன. சிங்கப்பூரில் Home Screen நிறுவனத்தினர் பொன்னியின் செல்வன் படத்தை வெளியிட உள்ளனர்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News