அண்ணா சீரியல் அப்டேட்: ஓட்டுக்காக சௌந்தரபாண்டி செய்த வேலை.. சனியனின் மனைவியை வைத்து ஷாக் கொடுத்த சண்முகம்

Anna Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 17, 2024, 01:40 PM IST
  • அண்ணா: இன்றைய எபிசோட் அப்டேட்
  • சனியனின் வீட்டுக்கு செல்லும் சண்முகம், பரணி
  • சௌந்தரபாண்டியின் திட்டம் தோல்வி
அண்ணா சீரியல் அப்டேட்: ஓட்டுக்காக சௌந்தரபாண்டி செய்த வேலை.. சனியனின் மனைவியை வைத்து ஷாக் கொடுத்த சண்முகம் title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அண்ணா' சீரியல்.

அண்ணா: இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. 

இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி 20 நிர்வாகிகளை கடத்திச் சென்ற ஒரு ரெசார்ட்டில் தங்க வைத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது சௌந்தரபாண்டி எல்லாருக்கும் சரக்கு ஊற்றி கொடுத்து குடிக்க வைத்து டான்ஸ் ஆடி உங்களை சந்தோஷப்படுத்த பாம்பேவில் இருந்து ஒரு பெண்ணை இறக்கி இருப்பதாக சொல்கிறார். 

சனியனின் வீட்டுக்கு செல்லும் சண்முகம், பரணி

மறுபக்கம் சண்முகம் பரணியும் சனியனின் வீட்டுக்கு வந்து அவரது மனைவியிடம் சனியன் யாரோ ஒரு பொண்ணை கட்டிப்பிடித்து வெளியே சுத்திக்கிட்டு இருக்காரு என்று பொய் சொல்லி டிராமா போட அதிர்ச்சி அடையும் அவரது மனைவி சனியனுக்கு போன் போட்டு எங்க இருக்க என்று கேட்கிறாள். 

மேலும் படிக்க | பரபரப்பான த்ரில்லர் 'பருவு' தொடர் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் தெரியுமா?

சனியன் சௌந்தரபாண்டி ஐயாவோட தான் இருக்கேன் என்று இருக்கும் இடத்தை உளறி விடுகிறான். இங்கு சௌந்தரபாண்டி பாம்பேவிலிருந்து வரவைத்த பெண்ணை டான்ஸ் ஆட வைக்க அனைவரும் குடித்து கும்மாளம் இடுவதை முத்துப்பாண்டி வீடியோவாக எடுத்து வைக்கிறான். 

சௌந்திர பாண்டியின் திட்டம் தோல்வி

இந்த நேரத்தில் பரணி மற்றும் சண்முகம் கடத்தப்பட்ட 20 நிர்வாகிகளின் மனைவிகளோடு இந்த இடத்திற்கு வந்து அதிர்ச்சி கொடுக்கின்றனர். இவர்களால் சௌந்திர பாண்டியின் திட்டம் மொத்தமும் தோல்வி அடைகிறது. 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

அண்ணா: சீரியலை எங்கு பார்ப்பது?

அண்ணா சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | பிருத்வி அம்பர் - சந்திரசேகர் பாண்டியப்பா கூட்டணியில் உருவாகும் ‘சௌகிதார்’

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News