Annaatthe சூப்பர் வசூல்: பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் சூப்பர்ஸ்டார்!!

வார இறுதி நாட்களில், பெரிய திரையில் அண்ணாத்த படத்தைக் காண இன்னும் அதிக ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கபப்டுகின்றது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 6, 2021, 12:32 PM IST
  • அண்ணாத்த படத்தின் மூலம் ரஜினிகாந்த் மீண்டும் ஒரு முறை பாக்ஸ் ஆபிசை கலக்கியுள்ளார்.
  • உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிச் செல்கிறது அண்ணாத்த.
  • அண்ணாத்த படம் வசூலில் சக்கைப்போடு போட்டு வருகிறது.
Annaatthe சூப்பர் வசூல்: பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் சூப்பர்ஸ்டார்!! title=

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அண்ணாத்த படத்தின் மூலம் மீண்டும் ஒரு முறை பாக்ஸ் ஆபிசை கலக்கியுள்ளார். அண்ணாத்த படம் வசூலில் சக்கை படம் போட்டு வருகிறது.

குடும்ப பொழுதுபோக்கு படமான அண்ணாத்த உலகளவிலான வசூலில், 100 கோடி ரூபாய் வசூலைத்தாண்டிச் செல்வதாகக் கூறப்படுகின்றது.

2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் வெளியான படங்களில் அண்ணாத்த (Annaatthe) படம் இதுவரையிலான சிறப்பான ஓபனிங்கை பெற்றுள்ளது. அண்ணாத்த ரிலீஸ் ஆகி இரண்டாவது நாளிலும் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கின்றது. இந்த வெற்றி நடை வார இறுதியிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாக்ஸ் ஆபீசில் படு மாஸ் காட்டும் ரஜினிகாந்தின் அண்ணாத்த

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் அண்ணாத்த படம் வெளியிடப்பட்டது. இந்த தீபாவளியை சூப்பர்ஸ்டார் (Super Star) அவரது ரசிகர்களுக்கு மேலும் சிறப்பாக்கியிருக்கிறார் என்றே சொல்லலாம். இருப்பினும் சிறுத்தை சிவா இயக்கிய இப்படம் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

வர்த்தக ஆய்வாளர் மனோபாலா விஜயபாலன் தனது ட்வீட்டில், இப்படம் உலகம் முழுவதும் ரூ.70.19 கோடி வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளார். வெளியான முதல் நாள், அண்ணாத்த படம் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரூ.34.92 கோடி வசூலித்துள்ளது.

வார இறுதி நாட்களில், பெரிய திரையில் அண்ணாத்த படத்தைக் காண அதிக ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கபப்டுகின்றது. 2ஆம் நாள் முன்பதிவு அமோகமாக இருந்தது. இது வார இறுதியிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ:காட்சிகள் அமைப்பில் கோட்டைவிட்ட சிவா; அண்ணாத்த விமர்சனம் 

அண்ணாத்த் உணர்ச்சிகள் நிறைந்த ஒரு குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். ரஜினிகாந்த் மற்றும் கீர்த்தி சுரேஷ் அண்ணன் தங்கையாக நடிக்க, அவர்களுக்கு இடையிலான பாச பந்தத்தைப் பற்றி முக்கியமாகப் பேசுகிறது இந்த படம். படம் பார்த்த பலர் திரையரங்குகளிலேயே கண் கலங்குவதைக் காண முடிகின்றது.

சிறுத்தை சிவா இயக்கியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா (Nayanthara), மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ், சூரி, பாண்டியராஜன், லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.

ALSO READ:மாஸ் வேற லெவல்: அண்ணாத்த ட்விட்டர் விமர்சனம் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News