சீரடி கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன்: வைரலாகும் புகைப்படங்கள்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வெள்ளை சல்வார் கமீஸ் அணிந்து அழகாக இருக்கிறார். இருவரையும் பார்க்கும்போது, இதுதான் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட ஜோடி என பலருக்குத் தோன்றுவதை மறுப்பதற்கில்லை.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 19, 2021, 04:46 PM IST
சீரடி கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன்: வைரலாகும் புகைப்படங்கள் title=

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் அவரது காதலர் விக்னேஷ் சிவனும் மும்பையில் பல்வேறு புகழ்பெற்ற இந்து கோவில்களில் வழிபட்டு ஆசி பெற்றனர். இருவரும் புகழ்பெற்ற ஷிரடி சாய்பாபா கோயில் முதல் சித்தி விநாயக் வரை, பல கோயில்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இந்த ஆன்மீக பயணத்தின் புகைப்படங்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் பகிந்துகொண்டார். இதற்கு ரசிகர்கள் பல ஹார்ட் எமோஜிகளையும் ஆசையான கமெண்டுகளையும் வழங்கி வருகின்றனர்.

நயன்தாராவுடனான (Nayanthara) தனது படங்களை அவ்வப்போது விக்னேஷ் சிவன் தனது சமூக ஊடக கணக்குகளில் பகிர்ந்துகொள்வது வழக்கம். அந்த வகையில், இந்த ஆன்மீக பயணத்தின் படங்களையும் பகிர்ந்து அவர் ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளார்.

இருவரும் வெள்ளை உடையில், ஒருவர் கையை பிடித்துக்கொண்டு கோவிலில் நடந்து செல்வதை இந்த புகைப்படங்களில் காண முடிந்தது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வெள்ளை சல்வார் கமீஸ் அணிந்து அழகாக இருக்கிறார். இருவரையும் பார்க்கும்போது, இதுதான் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட ஜோடி என பலருக்குத் தோன்றுவதை மறுப்பதற்கில்லை.

ALSO READ:திருப்பதியில் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன்: வீடியோ வைரல் 

படங்களை பார்க்கும்போது, இந்த கோயில்களுக்கு செல்ல வேண்டும் என பல நாட்களாக இருவருக்கும் விருப்பம் இருந்ததாகத் தெரிகிறது. இந்த புகைப்படங்கள பகிர்ந்த விக்னேஷ் (Vignesh Sivan), “சிரடி, மும்பாதேவி, மகாலட்சுமி கோயில், சித்தி விநாயக் கோயில்களிலிருந்து அனைவருக்கும் ஆசீர்வாதங்கள். #godbless #dussehra #ayudhapooja #saraswathipooja #blessings” என்று எழுதியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு, நயன்தாராவும் விக்னேஷும் மும்பை சென்றனர். விக்னேஷின் செல் போனிலிருந்து நயன்தாரா ஒரு அழகான செய்தி மூலம் ரசிகர்களுக்கு நவராத்திரி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் மும்பைக்கு சென்றது விமுறைக்காகவா அல்லது வேலைக்காகவா என்பது தெளிவாகவில்லை. எனினும், இயக்குனர் அட்லீ மற்றும் ஷாருக்கான் (Shahrukh Khan) ஆகியோருடன் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்புக்காக நயன்தாரா மும்பைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு லயன் என்று பெயரிடப்பட்டுள்ளது.

ALSO READ:மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் ரேவதி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News