பாகுபலி குழுவுக்கு ஆஸ்கர் நாயகன் பாராட்டு!

Last Updated : May 22, 2017, 02:27 PM IST
பாகுபலி குழுவுக்கு ஆஸ்கர் நாயகன் பாராட்டு! title=

ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்பான 'பாகுபலி 2' திரைப்படத்தை பார்த்த இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் படக்குழுவினருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான 'பாகுபலி 2' திரைப்படம் உலக அரங்கில் இந்தியாவின் அடையாளமாக வெற்றி வாகைச் சூடி வருகிறது. சர்வதேச அளவில் ரூ.1500 கோடி வசூலை எட்டி தினசரி ஒரு சாதனை படைத்து வருகிறது. 

தற்போது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானும் தனது வாழ்த்துக்களை பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தற்போதுதான் சென்னையில் ‘பாகுபலி-2’ படத்தை பார்த்தேன். இப்படம் ரூ.2000 கோடிக்கு மேல் வசூலிக்கும் என நம்புகிறேன். ராஜமௌலியும், கீரவாணியும் தென்னிந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் புதிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்' என்று புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

ஏ.ஆர்.ரகுமானின் இந்த பாராட்டு படக்குழுவினரை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருப்பதாக இயக்குனர் ராஜமௌலி நன்றி தெரிவித்துள்ளார்.

Trending News