புதுமையான கதைக் களத்துடன், பெண்மையின் வீரத்தை போற்றும் விதமாக உருவாகி வரும் திரைப்படம் அருவி!
அதிதி பலன் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்குகிறார். "ட்ரீம் வாரியர்ஸ் பிட்சேர்ஸ்" எஸ்.ஆர்.பிரபு தயாரிகின்றார். மேலும் வேதாந்த பாரத்வாஜ், பிந்து மாலினி இசையமைக்கின்றனர்.
கண்ணை கவரும் வகையில் "போஸ்டர்" -களை வெளியிட்டதன் மூலம் பல ரசிகர்களின் கவனத்தை ஏற்கனவே ஈர்த்துவிட்ட "அருவி" படக்குழுவினர் தற்போது இப்படத்தின் ட்ரைலரினை வெளியிட்டுள்ளது.
முன்னதாக இப்பட குழுவினர் மிரளவைக்கும் டீசர்-னை வெளியிட்டனர். இது ரசிகர்கள் பலரது கவனத்தையும் கொள்ளையடித்தது!
இந்நிலையில் இன்று மாலை இப்படத்தின் ட்ரைலர் வெளியிட்டுள்ளது!