அவதார்: தி வே ஆஃப் வாட்டர் - வெளியானது அதிகாரப்பூர்வ தலைப்பு

அவதார் 2 படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் லோகோ வெளியாகியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Apr 28, 2022, 04:03 PM IST
  • 160 மொழிகளில் வெளியாகும் அவதார்
  • அவதார் படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு
  • அவதார்: தி வே ஆஃப் வாட்டர்
அவதார்: தி வே ஆஃப் வாட்டர் - வெளியானது அதிகாரப்பூர்வ தலைப்பு title=

டைட்டானிக், தி டெர்மினேட்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான படம் அவதார். இப்படத்திற்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் இப்படம் வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்திருக்கிறது.

இதனையடுத்து அவதார் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகளை கேமரூன் தொடங்கினார். ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இப்படம் டிசம்பர் 16ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 

James Cameron

டால்பி ப்ரீமியம் 4k உடன் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகியிருக்கும் இப்படமானது உலகம் முழுவதும், 160 மொழிகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | அஜித் அப்படி நடந்துகொள்வாரென எதிர்பார்க்கவில்லை - ராஜமௌலி

இந்த அறிவிப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி இதன் மூலம் அவதார் படத்துக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதையும் உலகம் உணர்ந்திருக்கிறது.

இந்நிலையில் அவதார் 2 படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,  ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

Avatar

முதல் படமான “அவதார்” படத்தின் சம்பவங்களுக்கு பிறகு, ஒரு தசாப்த காலக்கட்டத்தை கடந்து , சல்லி குடும்பம் (ஜேக், நெய்திரி மற்றும் அவர்களது குழந்தைகள்), அவர்களைப் பின்தொடரும் பிரச்னைகள், பாதுகாப்புடன் இருப்பதற்கு அவர்கள் செல்லும் தூரம், அவர்கள் உயிருடன் இருக்க போரிடும் போர்கள் மற்றும் அவர்கள் அடையும்  துயரங்கள் அவர்களின் வெற்றி என இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | 160 மொழிகளில் வெளியாகும் அவதார் 2... ட்ரெய்லர் எப்போது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News