பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் பாக்கியா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தன்னை கணவன் ஏமாற்றினாலும், அவர் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட மனைவியாக நடித்து வருகிறார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 16, 2022, 03:22 PM IST
  • பாரதி கண்ணம்மா, நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்களின் நாயகிகள் மாற்றப்பட்டனர்
  • இவர் சீரியலில் இருந்து விலகப்போவதாக தகவல்கள் வெளியாகின
  • சுசித்ரா விலகுவதாக பரவிய செய்தி வதந்தி என தெரியவந்துள்ளது
 பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகும் பாக்கியா? அதிர்ச்சியில் ரசிகர்கள்! title=

விஜய் டிவி சீரியல்களில் பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி, ராஜா ராணி 2, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட சீரியல்கள் மிகவும் பிரபலம். சமீபத்தில் தான் பாரதி கண்ணம்மா, நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்களின் நாயகிகள் மாற்றப்பட்டனர். அதற்கு பல காரணங்களும் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவாக நடித்து வரும் சுசித்ரா சீரியலில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மேலும் படிக்க |‘பீஸ்ட்’டில் விஜய்யின் காஸ்ட்யூம் இதுவா?!

file image

பாக்கியலட்சுமி சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார் சுசித்ரா. அப்பாவி அம்மாவாக நடித்து வரும் இவருக்கு இல்லத்தரசிகளின் ஆதரவு அதிகம். தன்னை கணவன் ஏமாற்றினாலும், அவர் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட மனைவியாக நடித்து வருகிறார். அவ்வப்போது சமூக வலைதளங்களிலும் ட்ரெண்ட் ஆவார். இந்நிலையில் இவர் சீரியலில் இருந்து விலகப்போவதாக தகவல்கள் வெளியாகின. இவருக்கு பதில் யார் நடிப்பார் என்றெல்லாம் பலரும் வருத்தப்பட்ட நிலையில், மகிழ்ச்சியான செய்தியை ஷேர் செய்துள்ளார் சுசித்ரா. அதாவது அவர் சீரியலில் இருந்து விலகுவதாக வந்த செய்தி வதந்தியாம். இதுகுறித்து லைவ்வில் பேசிய அவர், “பாக்கியலட்சுமி சீரியலுக்கான பிரமோஷன் வேலைகள் மும்முரமாக சென்று கொண்டிருக்கிறது. எனது ரசிகர்களின் ஆதரவை கண்டு மகிழ்ச்சியில் உள்ளேன். நன்றாக சென்று கொண்டிருக்கும் சீரியலில் இருந்து நான் ஏன் விலகப் போகிறேன். நிச்சயம் பாக்கியலட்சுமியாக நான் தொடர்ந்து நடிப்பேன்” என்று தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | சிரஞ்சீவியின் காட்ஃபாதர் படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்

இதனையடுத்து சுசித்ரா விலகுவதாக பரவிய செய்தி வதந்தி என தெரியவந்துள்ளது. ஆனால் இப்போதெல்லாம் ஒரு சீரியல் ஹிட் அடித்துவிட்டால் உடனே நாயகிகள் படங்களுக்கு புக் ஆகத் தொடங்கிவிடுகிறார்கள். அதனால் தான் அவ்வப்போது இதுபோன்ற வதந்திகள் அதிக அளவில் வெளியாகிறது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News