வெளியானது பீஸ்ட்; ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

அதிகாலை 4 மணிக்கு சென்னை உள்ளிட்ட பல இடங்களில் பீஸ்ட் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 13, 2022, 06:21 AM IST
  • பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது
  • பீஸ்ட் திரை விமர்சனம்
  • ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு
வெளியானது பீஸ்ட்; ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம் title=

தமிழகம் முழுவதும் விஜய் நடிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. தமிழ், இந்தி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என 5 மொழிகளில் வெளியாகவுள்ள இப்படம் விஜய்யின் முதல் பான் - இந்தியா ரிலீஸ் படம் எனும் சிறப்பையும் பெற்றுள்ளது. இந்தியா மட்டுமல்லாது பல்வேறு உலக நாடுகளிலும் இப்படம் வெளியாகி உள்ளது. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கியுள்ள பீஸ்ட் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அத்துடன் இதில் யோகி பாபு, செல்வராகவன், அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

மேலும் படிக்க | கத்தார், குவைத்தை தொடர்ந்து தமிழகத்திலும் 'பீஸ்ட்'க்கு தடை - ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்த நிலையில் பெரும்பாலான திரையரங்குகளில் இன்று அதிகாலை 4 மணிக்கு பீஸ்ட் திரைப்பட  ரசிகர்கள் காட்சி திரையிடப்பட்டது. இதனால், அதிகாலை முதலே பீஸ்ட் திரைப்படத்தை காண ரசிகர்கள் திரையரங்குகள் முன் குவிந்தனர். 

அத்துடன் நடிகர் விஜய்யின் பிரம்மாண்ட கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வது, பட்டாசு வெடித்து தியேட்டரை தெறிக்க விடுவது மற்றும் டிஜே போட்டு அமர்க்களப்படுத்துவது என தியேட்டர்கள் முழுக்கவே திருவிழா கோலத்தில் காட்சியளிக்கிறது.

சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கம், ராஜேஸ்வரி திரையரங்கம், வெற்றி திரையரங்கம், காசி திரையரங்கம் உள்ளிட்ட பல திரையரங்குகளில் அதிகாலை காட்சிகள் ஆரம்பமாகி உள்ளன. பீஸ்ட் படத்தை காண குவிந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #BeastFDFS என டிரெண்டாகி வருகிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இதற்கிடையில் சென்னை குரோம்பேட்டில் உள்ள வெற்றி தியேட்டரில் பீஸ்ட் படத்தின் முதல் நாள் காட்சியை இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத், நாயகி பூஜா ஹெக்டே உள்ளிட்ட படக்குழுவினர் அதிகாலை காட்சியை கண்டு வருகினறன. 

இந்தநிலையில் உலகம் முழுவதும் இன்று பீஸ்ட் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வர தொடங்கி உள்ளது. இப்படத்தை பார்க்க வரும் ரசிகர்கள் படம் பற்றிய விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர். மேலும் அதிகாலை 4 மணிக்கு பீஸ்ட் படத்தின் முதல் காட்சி வெளியான நிலையில், ரசிகர்கள் நள்ளிரவு முதலே தியேட்டருக்கு முன் குவிந்து FDFS கொண்டாட்டத்தை அரங்கேற்றினர்.

மேலும் படிக்க | விஜய், அஜித்தை முந்தும் தனுஷ்! - ஆச்சர்யத்தில் கோலிவுட்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News