சிவகார்த்திகேயன் எழுத்தில் விஜய் குரலில் பீஸ்ட் முதல் சிங்கிள்!

பீஸ்ட் படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது  

Written by - ZEE Bureau | Last Updated : Dec 2, 2021, 02:37 PM IST
சிவகார்த்திகேயன் எழுத்தில் விஜய் குரலில் பீஸ்ட் முதல் சிங்கிள்!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடிக்கும் ஆக்ஷன் திரைப்படம் தான் 'பீஸ்ட்'.  இப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஜார்ஜியா, டெல்லி, சென்னை என பல்வேறு பெரு நகரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு பிரம்மாண்டமாக நடைபெற்றது.  சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் செல்வராகவன், யோகி பாபு , ஷைன் டாம் சாக்கோ, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  இப்படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  

ALSO READ வலிமை படத்தின் இரண்டாவது பாடல் ப்ரொமோ வெளியானது: ரசிகர்கள் மகிழ்ச்சி

மேலும் கனமழை காரணமாக முடங்கி கிடந்த பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு படத்தின் பணிகள் ஓரளவு நிறைவடைந்து உள்ளது.  இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.  நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டது.  கடந்த சில தினங்களுக்கு முன் படப்பிடிப்பு பணியின் 100-வது நாளை கொண்டாடும் விதமாக இயக்குனர் நெல்சன், தனது சமூக வலைதள பக்கத்தில் நடிகர் விஜய் டிரம்ஸ் வாசிக்க, அனைவரும் பின்னால் உற்சாகமாக நடனம் ஆடுவது போல் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

vijay

இதனை பார்த்த ரசிகர்கள் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என்று காத்து கொண்டிருந்தனர்.  ஏற்கனவே இப்படத்தின் ஒரு பாடலுக்கு லிரிக்ஸை சிவகார்த்திகேயன் எழுதுகிறார் என்று தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அதுகுறித்த கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது.  அதாவது இப்படத்தின் முதல் சிங்கிளுக்கு சிவகார்த்திகேயன் பாடல் வரிகளை எழுதியுள்ளார், அதனை நடிகர் விஜய் பாடியுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார், இந்த மூவரின் கூட்டணியில் வெளியாகும் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.  இதற்கு முன்னர்  மாஸ்டர் படத்தில் அருண்ராஜா காமராஜ் வரிகளில் விஜய் பாடி இருந்தார்.  

ALSO READ மாநாடு வெற்றியால் குஷியான யுவன் - என்ன செய்தார் தெரியுமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News