மாநாடு வெற்றியால் குஷியான யுவன் - என்ன செய்தார் தெரியுமா?

மாநாடு படம் வெற்றியால் சிம்புவுக்கு கிடைத்த பாராட்டுகளை கண்டு இதயம் நெகிழ்ந்துள்ளதாக இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா கூறியுள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 1, 2021, 08:35 PM IST
மாநாடு வெற்றியால் குஷியான யுவன் - என்ன செய்தார் தெரியுமா?

வெங்கட்பிரபு - சிம்பு - யுவன்சங்கர் ராஜா கூட்டணியில் கடந்தவாரம் வெளியான மாநாடு (Maanadu movie) திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சிம்பு, வெங்கட் பிரபு என இருவருக்குமே மிகச்சிறந்த கம்பேக் மூவியாக மாநாடு அமைந்துள்ளது. படம் திரையிடப்பட்ட அனைத்து இடங்களில் இருந்தும் பாசிடிவ்வான விமர்சனங்களே வந்தன. பாக்ஸ் ஆஃபீஸிலும் மிகப்பெரிய கலெக்ஷைனை பெற்றதால், அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்றார். சிம்பு மற்றும் வெங்கட்பிரபு உள்ளிட்டோரை நேரில் சந்தித்து படம் வெற்றிப்பெற்றதைக் கொண்டாடினார்.

ALSO READ | 'மாநாடு' படத்தில் நடிக்க இருந்த விஜய்! கைவிட்டு போனது ஏன்?

ஆனால், படம் திரையரங்குகளில் வெளியாவதற்குள் மிகப்பெரிய பிரச்சனைகளை சந்தித்தது. படம் வெளியாகும் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் தவிர்க்க முடியாத காரணத்தால் படம் வெளியாகாது என சுரேஷ் காமாட்சி அறிவித்தார். இது மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது. வியாபார ரீதியாகவும் சிக்கல் எழுந்த நிலையில், மிகப்பெரிய போராட்டத்துக்குப் பின்னர் திட்டமிட்டப்படி படம் வெளியானது. அண்மைக்காலமாக சர்ச்சைகளில் சிக்கியிருந்த சிம்புவுக்கு, மாநாடு நல்ல பெயரையும் பெற்றுக் கொடுத்ததுள்ளது.

ALSO READ | சிம்புவுடன் மீண்டும் ஜோடி சேரும் முன்னாள் காதலி 

இதற்கு பாராட்டு தெரிவித்து சிம்புவின் நண்பரும், இசையமைப்பாளருமான யுவன்சங்கர் ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சகோதரர், நண்பர் சிம்புவுக்கு மாநாடு படத்தின் மூலம் கிடைத்துள்ள நல்ல விமர்சனங்களைக் கண்டு மனம் நெகிழ்ந்துபோயுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த படத்திற்காக சிம்பு கொடுத்த ஆத்மார்த்தமான அர்பணிப்பிற்காகவும், உழைப்புக்காகவும் தான் பெருமைப்படுவதாகவும் யுவன் சங்கர்ராஜா கூறியுள்ளார். நண்பருக்காக யுவன் கொடுத்துள்ள இந்த அறிக்கை, சிம்பு உள்ளிட்ட மற்ற படக்குழுவினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News