நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது, முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே டிக்கெட்டுகளும் முடிந்து விடுகிறது, அந்த அளவிற்கு விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். இப்படத்தில் இருந்து வெளியான இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான மூன்றாவது பாடலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
மேலும் படிக்க | விஜய்- ஷாருக்கான் கூட்டணியில் புதிய படம்?! - வாய் பிளக்கும் திரையுலகம்!
இப்படம் பற்றிய தகவல்கள் அடிக்கடி வெளியாகி ரசிகர்களை உற்சாகபடுத்தி வருகிறது. இந்தத் திரைப்படம் வெளியாக சில நாட்களே உள்ள நிலையில் இப்படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இப்படத்தில் நடித்தவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது தான். 'பீஸ்ட்' படத்தின் கதாநாயகனான தளபதி விஜய்க்கு 80 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது, அதனையடுத்து இயக்குனர் நெல்சனுக்கு 8 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டதோடு இசையமைப்பாளர் அனிரூத்துக்கு 4 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தில் நடித்த மற்ற நடிகர், நடிகைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள சம்பளம் மொத்தம் 8 கோடி ரூபாய் என்றும், படத்தின் விநியோகம், விளம்பரம் போன்ற இதர பணிகளுக்கு மொத்தமாக 75 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மொத்தமாக இப்படத்தின் பட்ஜெட் 175 கோடி ரூபாயாகும். படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே செலவு செய்த பணத்தை விட, அதிக பணத்தை எடுத்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது 'கூர்கா' படத்தின் காப்பி என்று சிலர் கிண்டலடித்து வந்தாலும் இது முற்றிலும் தனித்துவமான சிறப்பான படம் என்று இயக்குனர் நெல்சன் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகப்போகும் இந்த படம் கிட்டதட்ட 800 தியேட்டர்களில் வெளியாகிறது.
மேலும் படிக்க | Beast Vs KGF2: ரிலீசுக்கு முன்பே ‘கே.ஜி.எஃப்-2’வை வென்ற பீஸ்ட்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR