வெறும் 20 நாட்களில் எடுக்கப்பட்ட படம்! மிரட்டும் 'மிரள்' ட்ரைலர்!

நடிகர் பரத் மற்றும் வாணி போஜன் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள 'மிரள்' படத்தின் த்ரில்லான ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருக்கிறது.   

Written by - RK Spark | Last Updated : Nov 5, 2022, 12:34 PM IST
  • மிரள் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது.
  • பரத், வாணி போஜன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
  • படம் நவம்பர் 11ம் தேதி வெளியாக உள்ளது.
வெறும் 20 நாட்களில் எடுக்கப்பட்ட படம்! மிரட்டும் 'மிரள்' ட்ரைலர்! title=

அறிமுக இயக்குனர் எம் சக்திவேல் இயக்கத்தில் நடிகர் பரத் மற்றும் சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்பட்டு தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்து கொண்டிருக்கும் நடிகை வாணி போஜன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மிரள்'.  இந்த படத்தின் மூலம் பரத் மற்றும் வாணி போஜன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர், ஏற்கனவே பரத்தின் 50ஆவது படமான 'லவ்' என்கிற படத்தில் வாணி போஜன் கதாநாயகியாக நடித்திருந்தார்.  ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி தயாரித்துள்ள இந்த 'மிரள்' படம் ஒரு ஸ்லாஷர் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது, சமீபத்தில் வெளியாகியுள்ள இப்படத்தின் மிரட்டலான ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

மேலும் படிக்க | துபாய் பறக்கிறார் விஜய்?... களைகட்டப்போகும் விழா... வெளியான புதிய தகவல்

'மிரள்' படத்தின் ட்ரைலர் கிட்டத்தட்ட 2 நிமிடம் நீளத்தை கொண்டிருக்கிறது, ட்ரைலர் நன்கு த்ரில்லராகவும், திகில் அனுபவத்தை தரும் வகையில் பல வினோதமான காட்சிகளும் இடம்பெற்று சிறப்பான அனுபவத்தை கொடுத்திருக்கிறது.  இந்த படத்தில் பரத் பொறியியலாளராக நடிக்கிறார், நடிகை வாணி போஜன் அவருக்கு மனைவியாக நடிக்கிறார், மகிழ்ச்சியான சென்றுகொண்டிருக்கும் குடும்ப வாழ்க்கையில் நடக்கும் ஒரு சம்பவம் அவர்களின் வாழ்க்கையை எப்படி புரட்டிபோடுகிறது என்பது தான் இப்படத்தின் கதை.  'மிரள்' படத்தில் பாடல் காட்சிகள் என்று எதுவுமில்லை மற்றும் இந்த படத்தில் அதிகளவிலான நட்சத்திரங்களும் இல்லை, இதில் கே.எஸ்.ரவிக்குமார், மீராகிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி போன்ற குறிப்பிட்ட சில கதாபாத்திரங்கள் மட்டுமே நடித்துள்ளனர்.

miral

பிரசாத் எஸ்.என் அவர்களின் பின்னணி இசையும், சுரேஷ் பாலாவின் அழகான காட்சிகளும், கலைவாணன் ஆர் அவர்களின் கட்களும் படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.  மிரள் படம் நவம்பர் மாதம் 11ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது, இப்படம் காற்றாலைப் பண்ணையின் பின்னணியில் உருவாகிறது.  மேலும் இந்த த்ரில்லர் திரைப்படம் தென்காசி, அம்பாசமுத்திரம் மற்றும் சென்னை போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் படிக்க | லவ் டுடே படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News