பரத் மற்றும் வாணி போஜனின் காதல்!

வாணி போஜன் மற்றும் பரத் நடிக்கும் 'லவ்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துவிட்டதை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.  

Written by - RK Spark | Last Updated : May 21, 2022, 06:20 PM IST
  • LOVE படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.
  • பரத் மற்றும் வாணி போஜன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பரத் மற்றும் வாணி போஜனின் காதல்! title=

இயக்குனர் ஆர்.பி.பாலா இயக்கும் நடிகர் பரத்தின் 50வது படத்தில் வாணி போஜன் கதாநாயகியாக நடிக்கிறார்.  'லவ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது, இதனை கொண்டாடும் விதமாக படக்குழுவினர், நட்சத்திரங்கள் என அனைவரும் கேக் வெட்டி கொண்டாடினர்.  இதுகுறித்து இயக்குனர் ஆர்.பி.பாலா அவரது ட்விட்டர் பக்கத்தில், "#LOVE படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது, இந்த விழாவை பரத், வாணி போஜன் மற்றும் பட குழுவினர் அனைவருடனும் சேர்ந்து கொண்டாடினோம்" என்று பதிவிட்டுள்ளார்.

bharat

மேலும் படிக்க | எடுத்த காட்சிகள் சரி இல்லாததால் மீண்டும் எடுக்கப்படும் 'பொன்னியின் செல்வன்?

இப்படத்தின் முழு காட்சியும் சென்னையில் தான் படமாக்கப்பட்டது.  இப்படம் குறித்து இயக்குநர் ஆர்.பி.பாலா கூறுகையில், பரத்தின் 50வது படத்தை நான் இயக்குவேன் என்று எனக்குத் தெரியாது, ஆனால் அவருடன் ஒன்றரை வருடங்களாகப் பேசிக்கொண்டிருந்தேன்.  நான் சில நல்ல ஸ்கிரிப்ட்களை அவரிடம் கூறினேன், ஆனால் அவர் காளிதாஸ் படத்தை விட சிறப்பான ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என்று விரும்பியதால் அவர் மேலும் சிறப்பான ஸ்க்ரிப்ட்களை தேடினார்.  அதன் பின்னர் ஒரு நாள், நான் இந்த கதையின் ஒரு வரியை மட்டும் அவரிடம் கூறினேன், இதனை கேட்டதும் அவர் உடனே இந்த கதையை தொடங்கலாம் என்று கூறினார்.  

 

இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இப்படம் அவரது 50வது படமாக அமைந்தது தான், அதோடு இதனை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.  இப்படத்தில் பரத் நன்றாக நடித்துள்ளார், அதோடு வாணி போஜன் இருக்கும் படங்கள் வெற்றி அடைந்துவிடுகிறது அதுபோல இப்படமும் வெற்றிப்படமாக மாறும் என்று நம்புகிறேன் என்று கூறினார்.  மேலும் பேசியவர், இது குடும்பங்கள் கொண்டாடும் படமாகவும் அதே சமயம் ஒரு சஸ்பென்ஸ் நிறைந்த த்ரில்லர் படமாகவும் இருக்கும்.  படத்தின் கிளைமாக்ஸ் யாரும் எதிர்பாராத விதத்தில் இருக்கும், அதனை கண்டு மக்கள் ஆச்சரியப்படுவார்கள்.  

நிச்சயம் இந்த படம் பார்வையாளர்களுக்கு நல்லதொரு விருந்தாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.  மேலும் இப்படம் குறித்து நடிகர் பரத் கூறுகையில், இது எனக்கு மகிழ்ச்சியான தருணம், ஏனெனில் இது எனது 50வது படம்.  இது ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடக்கும் ஒரு உணர்ச்சிகரமான குடும்ப படம், இதை த்ரில்லர் என்றும் சொல்லலாம்.  எங்களுடையது ஒரு இளம் குழு, நாங்கள் ஒரு நல்ல படத்தைத் தருவதற்கு கடினமாக உழைத்து இருக்கிறோம்.  என்னுடைய 50வது படத்திற்கு ஒரு நல்ல ஸ்கிரிப்டைத் தேர்ந்தெடுத்துள்ளேன், தனிப்பட்ட முறையில் இது எனக்கு முக்கியமான படமாக அமையும் என்று நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க | தளபதி விஜய் எனக்கு எப்போதும் ஸ்பெஷல் தான் -மனம் திறந்த மாளவிகா மோகனன் !

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News