பிரபல சீரியல் நடிகையில் கணவர் திடீர் மரணம்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Sruthi Shanmuga Priya Husband: சின்னத்திரை நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா, தன் கணவர் இறந்த செய்தியை இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் தெரிவித்திருக்கிறார்.   

Written by - Yuvashree | Last Updated : Aug 4, 2023, 06:32 AM IST
  • பாரதி கண்ணம்மா, நாதஸ்வரம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர், ஸ்ருதி சன்முகப்பிரியா.
  • கடந்த ஆண்டு இவருக்கு அரவிந்த் சேகர் என்பவருடன் திருமணம் நடைப்பெற்றது.
  • ஸ்ருதியின் கணவர் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
பிரபல சீரியல் நடிகையில் கணவர் திடீர் மரணம்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..! title=

திருமுருகன் இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘நாதஸ்வரம்’ தொடரில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருந்தவர், ஸ்ருதி சன்முகப்பிரியா. இவர், சில விஜய் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவருக்கும் அரவிந்த் சேகர் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைப்பெற்றது. 

ஸ்ருதி-அரவிந்த் சேகர்:

நடிகை ஸ்ருதி சன்முகப்பிரியா, கடந்த ஆண்டு மே மாதத்தில் அரவிந்த் சேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர், மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தை வென்ற பாடி பில்டர். அரவிந்த் சேகர், கடந்த ஆண்டு நடைப்பெற்ற ஜேபி கிங்க்ஸ் க்ளாசிக் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் வென்றார். உடற்பயிற்சி நிபுணராக விளங்கும் இவர், அதையே தன் தொழிலாகவும் கொண்டிருந்தார். 

மேலும் படிக்க | ரஜினிக்கு 150 கோடி! அப்போ தமன்னாவிற்கு எத்தனை கோடி? ஜெயிலர் படக்குழுவின் சம்பள விவரம்..!

திடீர் மரணம்:

அரவிந்த் சேகர், இரண்டு நாட்களுக்கு முன்பு (ஆக., 2) திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் ஆகி ஒரு வருடமே ஆகியுள்ள நிலையில், இந்த ஜோடிக்கு இப்படியொரு நிலை நேர்ந்து விட்டதே என ரசிகர்களும் சின்னத்திரை பிரபலங்களும் வருத்தம் தெரிவித்துள்ளனர். இவருக்கு 30 வயதுதான் ஆகிறது. இதுகுறித்து வெளியாகியுள்ள தகவல்களின் படி, அரவிந்திற்கு மாரடைப்பு ஏற்பட்டபோது அவர் வீட்டில் இருந்ததாகவும் மாரடைப்பு ஏற்பட்டு சில மணித்துளிகளில் அவர் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சமூக வலைதளத்தில் பிரபலம்..!

அனைத்து பிரபலங்களை போலவே ஸ்ருதி-அரவிந்த் சேகரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்தனர். அடிக்கடி ரீல்ஸ் செய்து பதிவிடுவது, காமெடியான வசனங்களை பேசி வைரலாவது என இவர்களது வீடியோக்கள் இணையத்தில் சுழன்று கொண்டே இருந்தன. இந்த நிலையில், இவர் தற்போது திடீரென்று உயிரிழந்திருப்பது நம்ப முடியாத செய்தியாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். தங்கள் முதல் வருட திருமண விழாவையும் இவர்கள் சமீபத்தில்தான் கொண்டாடினர். 

ஸ்ருதி பதிவு..

நடிகை ஸ்ருதி, தன் கணவரின் இறப்பு குறித்து இன்ஸ்டாகிறாம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தன் இன்ஸ்டா ஸ்டோரியில் கணவர் தன்னுடன் நடனமாடும் வீடியோவை பதிவிட்டு “இந்த ஒரு இரவு மீண்டும் கிடைப்பதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வேன்..” என அதில் எழுதியுள்ளார். ரசிகர்களுக்காக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “உங்களின் அன்பும் என் வீட்டில் உள்ளவர்களின் அரவணைப்பும் எனது குடும்பத்தாருக்கு நிறைய தைரியத்தை அளித்துள்ளது. எங்களுக்காக வேண்டிக்கொள்வதற்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார். 

“பிரிந்தது உடல் மட்டுமே..”

தன் கணவர் அரவிந்த் சேகருடன் எடுத்த புகைப்படத்தை ஸ்ருதி இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதில், “உன் உடல் மட்டுமே என்னை விட்டு பிரிந்துள்ளது. உன் உயிர், உன் மனம், என்னை அரவணைக்கும் உனது பாதுகாப்பு எல்லாமே என்னை சுற்றிதான் உள்ளது. நாளுக்கு நாள் உன் மீது எனக்கு அன்பு அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. நாம் இருவரும் ஏற்கனவே நிறைய நல்ல தருணங்களை உருவாக்கி விட்டோம். அதை எப்போதும் என்னிடத்தில் வைத்துக்கொள்வேன். உன்னை எப்போதும் என் அருகில் உணர்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த பதிவு வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க | எந்திரன் முதல் கஜினி வரை..ஹாலிவுட் படங்களை பார்த்து எடுக்கப்பட்ட தமிழ் படங்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News