பிக்பாஸ்-2 நிகழ்ச்சி! பட்டியல் விவரம் முதல் இன்று புரொமோ வரை!

எல்லோரும் எதிர்ப்பார்த்த பிக்பாஸ்-2 நிகழ்ச்சி கோலாகலமாக நேற்று தொடங்கிவிட்டது. இதில் ரசிகர்களுக்கு பிடித்த நிறைய பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

Last Updated : Jun 18, 2018, 11:29 AM IST
பிக்பாஸ்-2 நிகழ்ச்சி! பட்டியல் விவரம் முதல் இன்று புரொமோ வரை! title=

எல்லோரும் எதிர்ப்பார்த்த பிக்பாஸ்-2 நிகழ்ச்சி கோலாகலமாக நேற்று தொடங்கிவிட்டது. இதில் ரசிகர்களுக்கு பிடித்த நிறைய பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டு தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றது. தற்போது இரண்டாவாது சீசனை கமல்ஹாசன் அவர்கள் நேற்று தொடங்கியுள்ளார். இந்த பிக்பாஸ்-2 நிகழ்ச்சியில் 17-போட்டியாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு கமல் வழக்கம் போலவே போட்டியாளர்கள் ஒருவர் ஒருவராக அழைத்து வீட்டுக்குள் அனுப்பினார். 

இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பட்டியல் இதோ....!

முதல் போட்டியாளராக இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் நடித்ததன் மூலம் இளைஞர்களின் கனவு நாயகியாக வளம் வரக்கூடிய யாஷிகா ஆனந்த் இடம் பெற்றுள்ளார். 

அவரை தொடர்ந்து, தமிழ் படங்கள் பலவற்றிலும் வில்லன் கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்களை மிரள வைத்த பொன்னம்பலம் இடம் பெற்றுள்ளார்.

இவர்களை தொடர்ந்து 3-வது போட்டியாளராக மங்காத்தா, ஜில்லா படங்களில் நடித்திருந்த மகத் பொன்னம்பலம் தேர்ந்தெடுக்கபட்டார்.

அவர்களை தொடர்ந்து, டேனியல், RJ வைஷ்னவி, அவன்-இவன், தெகிடி உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஜனனி ஐயர், பாட்டு வித்தகருமான அனந்த் வைத்தியநாதன், பழம்பெரும் நடிகர் NS கிருஷ்ணனின் பேத்தியும், பாடகியுமான NSK ரம்யா, மற்றும் காமெடி நடிகர் சென்ராயன், மெட்ராஸ் பட நடிகை ரித்விகா, மும்தாஜ், பாலாஜி, மமதி சாரி, நித்யா பாலாஜி, ஷாரிக் ஹாசன் (வில்லன் நடிகர் ரியாஸ் கானின் மகன்), ஐஷ்வர்யா தத்தா, ஓவியா ஆகியோர் தேர்தெடுக்கபட்டுள்ளனர். 

இந்நிலையில், நிகழ்ச்சி தொடங்கப்பட்டு முதல்முதலாக இன்றைய புரொமோ வெளியாகியுள்ளது.அந்த புரொமோவில் இடம் பெற்ற காட்சி ஒன்றில் பிக்பாஸ் 4 பிரபலங்களின் உடை மட்டும் இல்லை யாருடையது என்று சொல்ல சொல்கிறார். 

இதையடுத்து, இன்றைய காட்சிகளில் எல்லோருக்கும் உடை வந்ததா, அனைவரும் மாற்றினார்களா என்பது தெரியவரும்.

Trending News