பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த பிரபல நடிகர்; ரசிகர்கள் அதிர்ச்சி

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 போட்டியாளர்கள் யார் யார் என்கிற பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 16, 2021, 03:23 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த பிரபல நடிகர்; ரசிகர்கள் அதிர்ச்சி title=

Bigg Boss Tamil Season 5: தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் (Bigg Boss Tamil) நிகழ்ச்சியின் 4 சீசன்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் (Kamalhaasan) தொகுத்து வழங்கினார். கொரோனா பெருந்தொற்று காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி எப்போது நடக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அப்போது நடக்கும் இப்போது நடக்கும் என்று சமூக ஊடகங்களில் பலரும் ஊகங்களை கொடுத்துக் கொண்டிருந்தனர். 

இதற்கிடையில் சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 5 (Bigg Boss Tamil) புரொமோ வெளியானது. இந்த புரொமோவில் கோட் ஷூட்டில் இருக்கும் கமல்ஹாசன் (Kamalhaasan) தனது கண்களை உருட்டி மிரட்டி, ஒரு வில்லத்தனமான சிரிப்புடன் ஆரம்பிக்கலாமா என்று பிக் பாஸ் சீசன் 5 லோகோவை அறிமுகம் செய்து வைத்தார். 

ALSO READ | Bigg Boss Tamil Issue: பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும்: பாஜக புகார்

இந்நிலையில் இந்த சீசனில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் பற்றிய செய்திகள் அடிக்கடி சமூக வலைதளத்தில் வெளியாகி கொண்டு தான் இருக்கிறது. அதில் கனி, சுனிதா, பாபா பாஸ்கர், சார்பட்டா பரம்பரை புகழ் ஜான் விஜய், நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், மைனா நந்தினி, செய்தி வாசிப்பாளர் கண்மணி, எம்.எஸ்.பாஸ்கர், லட்சுமி ராமகிருஷ்ணன், ஜி.பி.முத்து மற்றும் ஷகீலாவின் மகள் மிளா ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றது.

இதற்கிடையில் தற்போது லேட்டஸ்ட் தகவலாக, குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சியை நடத்தி வரும் நடிகர் இமான் அண்ணாச்சி பிக்பாஸ் 5வது சீசனில் கலந்து கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ | Bigg Boss Tamil Season 5: இரண்டாவது புரொமோ வீடியோ வெளியானது; கசிந்தது முக்கிய தகவல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News