Breaking: Bigg Boss புகழ் பிரபல சீரியல் நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்

“பிக் பாஸ்” நிகழ்ச்சி மூலம் ஒவ்வொரு வீட்டிலும் பிரபலமான சித்தார்த் ஷுக்லாவுக்கு, இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 2, 2021, 12:03 PM IST
Breaking: Bigg Boss புகழ் பிரபல சீரியல் நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம் title=

பிரபல ஹிந்தி தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் சித்தார்த் சுக்லா காலமானார் என மும்பை கூப்பர் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஹிந்தியின் மிகவும் பிரசித்தி பெற்ற தொடராக இருந்த “பாலிகா வது” மூலம் பிரபலமான சித்தார்த் ஷுக்லா, மாரடைப்பால் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 40.

“பிக் பாஸ்” நிகழ்ச்சி மூலம் ஒவ்வொரு வீட்டிலும் பிரபலமான சித்தார்த் ஷுக்லாவுக்கு, இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. அவரது குடும்பத்தில் அவரது தாயும் இரு சகோதரிகளும் உள்ளனர்.

"அவர் இறந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார்" என்று கூப்பர் மருத்துவமனையின் மூத்த அதிகாரி பிடிஐயிடம் கூறினார்.

சித்தார்த் சுக்லா ஒரு மாடலாக தனது திரை உலக வாழ்க்கையைத் தொடங்கினார். தொலைக்காட்சி நிகழ்ச்சியான ''பாபுல் கா ஆங்கன் சூட்டே நா '' வில் ஒரு முன்னணி கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் ''ஜானே பெச்சானே சே ... யே அஜ்னாபி ”, “ லவ் யு ஜிந்தகி '' போன்ற நிகழ்ச்சிகளில் அவர் தோன்றினாலும், ”பாலிகா வது '' என்ற தொலைக்காட்சித் தொடர் மூலன் அவர் ஒவ்வொரு வீட்டிலும் அறியப்பட்ட நபரானார்.

அவர் '' ஜலக் திக்லா ஜா 6 '',  '' ஃபியர் ஃபாக்டர்: கத்ரோன் கே கிலாடி 7 '' மற்றும் '' பிக் பாஸ் 13 '' உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றார்.

2014 ஆம் ஆண்டில், கரண் ஜோஹர் தயாரித்த '' ஹம்ப்டி சர்மா கி துல்ஹானியா '' படத்தில் ஒரு குணசித்திர கதாபாத்திரம் மூலம் அவர் பாலிவுட்டில் அறிமுகம் ஆனார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News